உலகம்

“என் வழி தனி” – இளவரசி மேகன்!

லண்டன், செப்.21- அரச குடும்பத்து மருமகளாகிவிட்ட நிலையிலும் அக்குடும்பத்தின் பாரம்பரிய பழக்கத்துக்குள் தன்னை பொருத்திக் கொள்ளாமல் என் வழி தனி என்ற போக்கில் பிரிட்டன் இளவரசி மேகன் மார்க்கல் தனித்தே நிற்கிறார் என மறைந்த இளவரசி டயானாவின் தோழி லேடி கோலின் கூறியுள்ளார்.

இளவரசி டயானா சாதாரண குடும்பத்தில் இருந்து அரச குடும்பத்து மருமகளாகிய பின்னர் இளவரசர் சார்லஸின் நண்பர்களுடன் எளிதில் ஒன்றிணைந்ததோடு மட்டுமல்லாமல் அக்குடும்ப தொடர்பான நிகழ்ச்சிகளில் மிகவும் சாதாரணமாக கலந்து கொண்டார்.

ஆனால் , இளவரசி மார்க்கலை அவரது கணவர் தனது நண்பர்களிடம் அறிமுகப் படுத்துகிறார் மற்றும் விருந்து நிகழ்ச்சிகளுக்கு அழைத்து சென்றாலும் அவர் தனித்தே காணப்படுகிறார் எளிதில் அரச குடும்ப பழக்கத்தில் ஐக்கியமாகி விடவில்லை.

அரச குடும்பத்துக்குள் ஐக்கியமாவது கடினமானது என்றாலும் டயானா, கேத் மிடில்டன் ஆகிய இருவரையும் ஒப்பிடுகையில் மேகன் சற்று தயக்கத்தில் இருக்கிறார். அதற்கு ஒரே காரணம் தான் ஒரு நடிகை என்பதை அவர் நினைவில் வைத்துக் கொண்டு சற்று தயங்குகிறார் என லேடி கோலின் கூறியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker