Latestமலேசியா

கோலாலம்பூர்: ‘மெத்தனல்’ கலக்கப்பட்ட மதுபானம் அருந்திய மேலும் ஒருவர் இன்று மரணம்!

கோலாலம்பூர்,செப்.21- கோலாலம்பூரில் ‘மெத்தனல்’ எனப்படும் ஒருவகை வேதியல் திரவம் கலக்கப்பட்ட மதுபானத்தை அருந்தியவர்களில் மேலும் ஒருவர் இன்று உயிரிழந்தார்.

அவர் உயிரிழந்ததை அடுத்து, கோலாலம்பூரில் நச்சுத்தன்மை கொண்ட மதுபானத்தை அருந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5-ஆகி உள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோஶ்ரீ மஸ்லான் லஸிம் தெரிவித்தார்.

“இங்கு மட்டும் எழுவர் இந்த மதுபான சம்பவத்தால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் மூவர் உள்நாட்டினர், மேலு மூவர் மியன்மார் நாட்டவர்கள், ஒருவர் இந்திய நாட்டவர் ஆவார். அவர்களில் ஐவர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்த வேளை, எஞ்சிய இருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது” என அவர் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker