Latestஉலகம்

செவ்வாயில் நாசா விண்கலம்: தொழில்நுட்ப கோளாறில் சிக்கியது!

நியூயார்க், செப்.21- செவ்வாய்க் கிரகத்தை ஆராய நாசா அனுப்பிய ‘கியூரியாசிட்டி ரோவர்’ விண்கலம் தொழில்நுட்பக் கோளாறினால் திரட்டியத தகவல்களை பூமிக்கு அனுப்ப முடியாத நிலையில் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய்க் கிரகத்தை பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

அமெரிக்கா கடந்த 2011ஆம் ஆண்டு அனுப்பிய சியூரியாசிட்டி ரோவர் விண்கலம் 5 வருடங்களாக செவ்வாய்க் கிரகம் குறித்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு கிரகம் தொடர்பான பல அறிவியல் உண்மைகளைக் கண்டறிந்து பூமிக்கு அனுப்பி வருகிறது.

350 மில்லியன் கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டு செவ்வாயில் 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட்-6 தேதியன்று வெற்றிகரமாக செவ்வாயில் தரையிறங்கிய கியூரியாசிட்டி மொத்த பணியில் 23 விழுக்காடு முடித்துள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் சேமித்த தகவல்களை பூமிக்கு அனுப்ப முடியாமல் கியூரியாசிட்டி இயக்கத்தை நிறுத்தியுள்ளது.

இதனைச் சரிசெய்யும் பணியில் விஞ்ஞானிகள் இறங்கி உள்ளதாகவும் விண்கலத்தில் சூரிய சக்தியை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைத்து உள்ளதாகவும் நாசா அறிவித்துள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker