Latestமலேசியா

ஜாமீன் தொகை: நிதி வசூலிக்க முற்சியா? யாரும் பணம் தராதீர்கள்! – நஜிப்

கோலாலம்பூர், செப்.21- தமக்கு நீதிமன்றம் வழங்கிய 35 லட்சம் ரிங்கிட் ஜாமீன் தொகை தொடர்பில் நிதிதிரட்டும் கோரிக்கை எதனையும் சமூக ஊடகங்களில் தாம் விடுக்கவில்லை. அப்படிப்பட்ட நிதி முயற்சிக்கு யாரும் நன்கொடை அளிக்க வேண்டாம் என்று முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“எனக்கு ஆதரவுக் குரல் கொடுத்தவர்களை நான் பாராட்டுகிறேன். ஆனால் ஜாமீன் தொகைக்காக நிதி கேட்டு கோரிக்கை விடுத்ததாக சமூக ஊடகங்களில் குறிப்பிடப் பட்டதைப் போல நானோ அல்லது என் குடும்பமோ எந்த வேண்டுகோளையும் விடுக்கவில்லை” என்று நஜிப் சொன்னார்.

“எனக்கு உதவ வேண்டும் என்ற உங்களின் எண்ணத்தைப் பாராட்டுகிறேன். எனக்கு ஆதரவு தெரிவித்த சகோதர, சகோதரிகளுக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன். ஆனால், மறுபடியும் தெளிவுப்படுத்து கிறேன், எந்தவொரு தரப்பிடமிருந்தும் நான் எனக்கு நன்கொடை கேட்கவில்லை” என்று தமது முகநூல் பதிவில் நஜிப் கூறியுள்ளார்.

தற்போது சமூக ஊடகங்களில் பரவலாகி கொண்டிருக்கும் வங்கிக் கணக்கில் நன்கொடை செலுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். என்னுடைய ஜாமீனுக்காக பொதுமக்களிடமிருந்து நிதி ஆதரவு தேவைப் படுமேயானால், அது தொடர்பான வங்கிக் கணக்கு விபரத்தை எனது முகநூலில் முறையாக நான் பதிவிடுவேன். எனவே வேறு தரப்புகள் திரட்ட முனையும் நிதிக்கு நன்கொடை தரவேண்டாம் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker