Latestமலேசியா

தேர்தல் ஆணையத் தலைவராக அஸார் ஹருண் நியமனம்!

கோலாலம்பூர்,செப்.21- சமூக ஊடகங்களில் “ஆர்ட் ஹருண்” என்று பிரபலமாக அழைக்கப்படும் மூத்த வழக்கறிஞர் அஸார் ஹருண் தேர்தல் ஆணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை முதலாம் தேதி பணி ஓய்வுபெற்ற டத்தோஶ்ரீ முகமட் ஹஷிம் அப்துல்லாவுக்கு பதிலாக 56 வயது அஸார் இப்பதவியை ஏற்கவிருக்கிறார்.

அரசியலமைப்பின் 114-வது சட்டத்தின் முதலாம் பிரிவின்படி அஸாரை நியமித்துள்ளதாக அரசாங்க தலைமைச் செயலாளர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் பாக்கார் தெரிவித்தார். அதற்கு மாமன்னரின் ஒப்புதலும் கிடைத்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அஸார், மலாயாப் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர் ஆவார். அதையடுத்து, அவர் லண்டனின் கிங்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் முதுகலைப் பட்டக்கல்வி பயின்றார். 1987-ஆம் ஆண்டு முதல் வழக்கறிஞராக பணியாற்றி வந்த அஸார் தேர்தல் துறையில் நிபுணத்துவம் பெற்றவராம்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker