Latestமலேசியா

நிர்வாண புகைப்படம்: காதலியை மிரட்டிய காதலன்! மலேசியாவில் அதிகரிக்கும் சம்பவங்கள்!

கோலாலம்பூர், செப்.21- காதல் வயப்பட்டிருந்த வேளையில், தனது காதலனுக்கு பல நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய 21 வயது இளம் பெண், இப்போது இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டு பரிதவிக்கிறார்.

கல்லூரி காலத்தில் காதலர்களாக இருந்த கோய் (வயது 21) மற்றும் கோவன் ஆகிய இருவரும், இவ்வாண்டு தொடக்கத்தில் பல்வேறு பிரச்சனைகள் பிரிந்துச் சென்றனர்.

ஆனால், கோவனால் கோய்யை பிரிய முடியவில்லை. என்னை பிரிந்தால், நீ எனக்கு அனுப்பிய நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்று கோவன் இருமுறை கோய்யை மிரட்டினான்.

ஆனால், அந்த மிரட்டலுக்கு கோய் பயப்படவில்லை. இதனிடையில், சில நாட்களுக்கு முன்னர், முகநூல் பக்கத்தின் வாயிலாக, கோய்யின் அரை நிர்வாண படங்கள் தங்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளதாக அவரின் இரு நண்பர்கள் அவரின் தெரிவித்த போது, கோவன் வெற்று மிரட்டலை தனக்கு விடுக்கவில்லை என்பதை கோய் அறிந்தார்.

கோய்க்கு நேர்ந்துள்ள சம்பவத்தை போன்று, இவ்வாண்டு 15 சம்பவங்கள் குறித்து தங்களிடம் புகார் செய்யப் பட்டுள்ளதாக மசீச பொதுச் சேவை மற்றும் புகார் இலாகா தலைவர் டத்தோஶ்ரீ மைக்கல் சோங் கூறினார்.

“அந்தச் சம்பவங்களில் 13 சம்பவங்கள் பெண்களால் புகார் செய்யப்பட்டுள்ளன. மற்ற இரு சம்பவங்களை ஆண்கள் புகார் செய்துள்ளனர்” என்று அவர் சொன்னார்.

இவ்வாறான சம்பவங்களால் பாதிக்கப்படுவோர், அப்பிரச்சனைகளை தனியாக எதிர்கொள்ளாமல், தங்களின் குடும்பத்தார் மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களின் உதவியோடு எதிர்கொள்ள வேண்டும் என்று மைக்கல் அறிவுறுத்தினார்.

இவ்வாறு செய்வதன் வாயிலாக பாதிக்கப்படுவோருக்கு ஆறுதல் மற்றும் உதவிகள் உண்டு என்பதை மிரட்டுபவர்கள் உணர்வார்கள் என்று அவர் கூறினார்.

“நான் தற்கொலை செய்துக் கொள்ள போகிறேன் என்று கூறி, கோவன் எனக்கு தூக்க மாத்திரைகளின் புகைப்படங்களை அனுப்பி வைத்தான்” என்று கோய் சொன்னார்.

“நான் அவனை மிகவும் நேசித்தேன். அதனால் தான் அவனை நம்பி எனது நிர்வாண புகைப்படங்களை அவனுக்கு அனுப்பி வைத்தேன். அந்தப் புகைப்படங்களை அழித்து விடுமாறும் நான் அவனை கேட்டுக் கொண்டேன்.

“நான் செய்தது தவறு என்பதை நான் இன்று உணர்கிறேன். யாரும் என்னைப் போன்று எவ்வித தவறும் செய்து விட வேண்டாம்” என்று கோய் அறிவுறுத்தினார்.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker