Latestமலேசியா

நெகிழி உறிஞ்சு குழாய்க்குத் தடை!

புத்ராஜெயா,செப்.21- அடுத்தாண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி கோலாலம்பூர், புத்ராஜெயா, லபுவான் ஆகிய கூட்டரசு பிரதேசங்களிலுள்ள கடைகளிலும், உணவகங்களிலும் பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்களின் (ஸ்ட்ரோ) பயன்பாட்டை முற்றிலும் நிறுத்த கூட்டரசு பிரதேச அமைச்சு முடிவு செய்துள்ளது.

தூய்மைக்கேட்டு பிரச்சனையைக் குறைப்பது மட்டுமின்றி, இயற்கை, சுற்றுச்சூழலைப் பேணி காப்பதற்காகவும் இந்நடவடிக்கையை எடுக்கப்படவுள்ளதாக கூட்டரசு பிரதேச அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோஶ்ரீ அட்னான் முகமட் இக்சான் தெரிவித்தார்.

பிளாஸ்டிக் என்கிற நெகிழி பயன்பாட்டின் ஆபத்து மீதான விழிப்புணர்வை முதலில் மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் புகட்ட வேண்டும். அதன் பிறகே, 2020-ஆம் ஆண்டில், பிளாஸ்டிக் உறிஞ்சி குழாய்க்கான தடை சட்டப்பூர்வமாக அமலுக்கு கொண்டு வரப்படும் என்றார் அவர். அத்துமீறுவோருக்கு அதிகபட்சம் 1,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படலாம்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker