Latestமலேசியா

வசந்தப் பிரியா மரணம்: பின்னணியில் ‘சூது’ ஏதுமில்லை-நீதிமன்றம் தீர்ப்பு!

ஜோர்ஜ் டவூன், செப்.21- ஆசிரியர் ஒருவரின் கைத்தொலைபேசியை திருடியதாக குற்றஞ்சாட்டப் பட்டதால் மனமுடைந்து தூக்கில் தொங்கியதால் தான், எம்.வசந்தப் பிரியா என்ற 14 வயது மாணவி இறந்தார் என்று மரண விசாரணை நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

நீதிமன்றத்தில் வழங்கப் பட்ட ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளின் சாட்சியங்கள் வாயிலாக, அந்தச் சிறுமியின் மரணத்தில் எவ்வித குற்றவியல் தடயங்களும் தென்படவில்லை என்று மரண விசாரணை நீதிபதி நோர்சல்ஹா ஹம்ஸா கூறினார்.

“நீதிமன்றத்தில் வழங்கப் பட்ட ஆதாரங்கள் வாயிலாக, அந்தச் சிறுமி தாமாகவே தூக்கு மாட்டிக் கொண்டார் என்பது தெரிய வந்துள்ளது. அவரை யாரோ தூக்கில் தொங்க விட்டிருக்கலாம் என்பதை நிரூபிக்கும் வகையில் எவ்வித ஆதாரங்களும் சமர்ப்பிக்கப் படவில்லை.

“சம்பவம் நிகழ்ந்த போது, அச்சிறுமியின் அறையில், அவருடன் வேறு யாரும் இல்லை என்பதும் நிரூபனமாகி உள்ளது. அதுமட்டுமல்லாது, தூக்கில் தொங்கியதால் அவரின் கழுத்து பகுதியில் மட்டும் தான் காயம் ஏற்பட்டுள்ளது.

“வசந்தப் பிரியாவின் இடது கைகளில் தென்பட்டுள்ள காயங்களுக்கும், அவரின் தற்கொலைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை” என்று நோர்சல்ஹா தெரிவித்தார்.

கடந்த ஜனவரி மாதம் 24-ஆம் தேதியன்று, தனது அறையில் தூக்கித் தொங்கிய வசந்தப் பிரியாவை காப்பாற்றி, அவரின் தந்தை சுங்கை பாக்காப் மருத்துவமனையின் அவசரப் பிரிவில் சேர்த்தார். சுயநினைவு திரும்பாமல், கடந்த பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதியன்று வசந்தப் பிரியா மரணமடைந்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker