Latestமலேசியா

7-ஆவது பிரதமராக நான் தான் ஆகியிருக்க வேண்டும்!- அன்வார்

கோலாலம்பூர்,செப்.21- கடந்த மே 10-ஆம் தேதி, நாட்டின் ஏழாவது பிரதமராக துன் மகாதீர் பதவி ஏற்பதைப் பார்த்த அந்த நொடியில், ‘மகாதீரின் இடத்தில் நான் இருந்திருக்க வேண்டியவன்’ என்ற எண்ணம் தனக்கு தோன்றியதை பிகேஆர் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒப்புக்கொண்டுள்ளார்.

சிங்கப்பூரில் பல்கலைக்கழக மாணவர்களுடான கருத்துக்கள நிகழ்ச்சியில், துன் மகாதீர் பிரதமராக பதவு உறுதி மொழி எடுத்துக்கொண்ட சமயத்தில் உங்களுக்கு என்ன தோன்றியது என மாணவர் ஒரு கேட்டபோது, அன்வார் இவ்வாறு பதில் அளித்ததாக ‘சேனல் நியூஸ் ஆசியா’ செய்தி வெளியிட்டுள்ளது.

“அரசியல் ரீதியில் பார்க்கும்போது பக்காத்தான் ஹராப்பானுக்கு கிடைத்த வெற்றி என மகிழ்ச்சியாக இருந்தது. அதே சமயம், தனிப்பட்ட முறையில் பார்க்கும்போது நான் தானே பிரதமராக ஆகிருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது உண்மை” என அன்வார் நேர்மையாகக் குறிப்பிட்டிருந்தார்.

முன்பு துன் மகாதீர் பிரதமராக இருந்தபோது 1998-இல் அன்வார் துணைப் பிரதமராக இருந்தார். அப்போதுதான் அன்வாரை துன் மகாதீர் பதவியை விட்டு வெளியேற்றினார்.

பல ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் இணைந்தனர். பக்காத்தான் ஹராப்பானின் மூலம் கடந்த பொதுத்தேர்தலில் தேசிய முன்னணியை வீழ்த்தினர். இந்த வெற்றியை அடுத்து துன் மகாதீர் பிரதமரானார். பேரரசர் அன்வாருக்கு பொதுமன்னிப்பு வழங்கியதை அடுத்து அன்வார் சிறையிலிருந்து வெளியேறினார்.

4 மாத ஓய்வுக்குப் பின், அடுத்த மாதம் 13-ஆம் தேதி போர்ட்டிக்சனில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுல் அன்வார் போட்டியிடவிருக்கிறார். இடைத்தேர்தலில் அன்வார் வெற்றிப் பெற்றார் அவர் எம்பியாக மீண்டும் நாடாளுமன்றத்தில் காலடி எடுத்து வைப்பார் என பெரிதும் நம்பப்படுகிறது.

ஈராண்டுகளுக்கு பிறகு அன்வாரிடம் பதவியை ஒப்படைப்பேன் என துன் மகாதீர் கூறியிருந்தார். அதற்கு ஏதுவாக அன்வாரின் இந்த அரசியல் பயணம் அமைந்துள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker