Latestஉலகம்

இலங்கையில் பிறந்து பிரிட்டனில் சாதித்த தமிழ்ப்பெண் மாயா- ஆவணப்படம்! -(VIDEO)

லண்டன்,செயப் 22- இலங்கையில் பிறந்து ‘பாப்’ பாடகராக புகழ்பெற்ற மாயா அருள்பிரகாசத்தின் வாழ்வில் நடந்து சம்பவங்களை பின்னணியாகக் கொண்ட ஓர் ஆவணப்படம் தயாராகியுள்ளது.

அவருக்கு மூன்று பெயர்கள் உண்டு. மாதங்கி, மாயா, மியா என மூன்று பெயர்களுக்கும் வெவ்வேறு பின்னணி உண்டு. மாதங்கி அவரது தமிழ் பெயர். பின்னணியை நினைவூட்ட, மாயா என்ற பெயர். அவர் லண்டனில் வளர்ந்ததைக் குறிக்க, மியா என்ற பெயர்.

அவர் ஒரு மேடைப் பாடகி. ஆவணப்படம் எடுப்பவர். பிரிட்டனில் பாப் இசையில் பங்கு வகிப்பவர். சமாதான ஆர்வலர். அமெரிக்க பொழுதுபோக்கு நிகழ்வுகளை விமர்சிப்பவர் என பல காரணங்களை குறிப்பதாக பன்முகம் கொண்டவர்.

இளம் பருவத்தை இலங்கையில் செலவிட்ட மாயாவுக்கு அவரது தந்தை இலங்கை போரோடு தொடர்புடையவர் என்பதால் லண்டனுக்கு ஓட வேண்டிய ஒருநிலை ஏற்பட்டது.

அங்கு அவர் ஒரு புகழ் பெற்ற பாப் பாடகராக மாறினாலும் அவர் செய்த சர்ச்சைக்குரிய சிறு செயல்களே பெரிதாக பேசப்பட்டன. இசை மீதுள்ள ஆர்வம் ஒரு பக்கமிருக்க அதைப் பயன்படுத்தி இலங்கையில் குடியேறிய தனது மக்களைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற அடங்கா ஆவலும் அவருக்கு மிக அதிகமாகவே உண்டு.

ஆனால் இந்த ஆவணப் படத்தில், தெள்ளத் தெளிவான- அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய- தமிழர்கள் அனுபவித்த சித்ரவதைகளை புலப்படுத்தக் கூடிய மாயாவின் பக்கம் நியாயமிருப்பதை சந்தேகமின்றி விளக்கும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

அவரது பாடல்களின் சத்தத்தில் அவர் வெளிக்கொணர விரும்பும் விஷயங்கள் அமுங்கிப் போய்விடுகின்றன. ஆனால் இந்த ஆவணப் படம், அகதிகளின் கதையை மாயாவின் அகதிக் கதையை அவர் எப்படி தனது வாழ்வு முழுவதுமே தொடர்கிறார் என்பதை தெளிவாக விளக்குகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker