Latestமலேசியா

செப்.23: பெட்ரோனீத்தா ஏற்பாட்டில் ‘தெ ஆர்க்கிட் ரன் & ரைட் 2018’

கோலாலம்பூர்,செப்.22- பெட்ரோனாஸின் பணியாளர்களின் மனைவிமார்கள், பெண் பணியாளர்கள் சங்கமான பெட்ரோனீத்தா ஏற்பாட்டில் நாளை ஞாயிற்றுக்கிழமை “தெ ஆர்க்கிட் ரன் & ரைட்” என்ற வருடாந்திர நிகழ்ச்சி நான்காம் ஆண்டாக பெர்சியாரான் கேஎல்சிசியில் காலை 6.15 தொடங்கி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியை, இளைஞர், விளையாட்டு அமைச்சர் சைட் சடிக் தொடக்கி வைக்கவுள்ளார்.

இந்த ஆர்க்கிட் ஓட்டத்திலும், சைக்கிளோட்டத்தில் சுமார் 7,000 பங்கேற்பாளர்கள் பங்கெடுக்கவுள்ளனர். சிறுவர்களைப் பாதிக்கும் மருத்துவ பிரச்சனைகள் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவ்வாறு பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கு நிதியுதவி வழங்குவதற்காகவும் இந்நிகழ்ச்சி நடத்தப்படுவதாக பெட்ரோனீத்தா தலைவர் புவான்ஶ்ரீ டாக்டர் அசுரா அகமட் தாஜூட்டின் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கெடுப்போர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதில், மொத்தம் மூன்று முக்கியப் பிரிவுகள் உள்ளன. A பிரிவு ஆண்களுக்கும் பெண்களுக்குமான 12 கிலோமீட்டர் ஓட்டமாகும். 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதில் பங்கேற்பர். B பிரிவு 7 வயதுக்கு மேற்பட்டோருக்கான 5 கிலோமீட்டர் கேளிக்கை ஓட்டமாகும். C பிரிவு 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான 5 கிலோமீட்டர் சைக்கிளோட்டமாகும்.

இதைத் தவிர மேலும் சில நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பெட்ரோனீத்தா தெரிவித்துள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker