Latestஇந்தியா

மிரட்டல்- அவதூறு: நடிகர் கருணாஸ் கைது

சென்னை, செப் 23- தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் காவல்துறை குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் சார்பில் கடந்த 16ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசினார். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தன்னை கண்டு அஞ்சுவதாக தெரிவித்தார்.

மேலும் காவல்துறை அதிகாரி ஒருவருக்கு சவால் விடுத்த அவர், முடிந்தால் காக்கிச் சட்டையை கழற்றிவிட்டு நேருக்கு நேர் மோதிப் பார்க்குமாறு சவால் விடுத்தார். ஜாதி ரீதியாகவும் பல்வேறு சர்ச்சை கருத்துகளை கருணாஸ் பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை, அடுத்து முதல்வர் மற்றும் காவல் துறையை அவதூறாக பேசியதாக கருணாஸ் மீது நுங்கப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். யூ டியூப்பில் வெளியான வீடியோவை ஆதாரமாக கொண்டு 8 பிரிவுகளின் கீழ் கருணாஸ் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

இந்நிலையில் கருணாஸை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் போலீசார் அதிகாலை அதிரடியாக கைது செய்தனர். கைதாகி வேனில் ஏற்றும் முன் ஊடகங்களிடம் கருணாஸ் பேசினார்.

“சட்டமன்ற உறுப்பினரான என்னை கைது செய்ய சபாநாயகரின் அனுமதி பெறவேண்டும். ஆனால் காவல் துறை அதை செய்ததா? என்று தெரியவில்லை.

இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை உண்டாக்கும் வகையில் பேசிய என் மீது குற்றப்பிரிவு 307 கீழ் ஏன் பதிவு செய்தனர் எனத் தெரியவில்லை. கருத்து சுதந்திரத்தை நசுக்கும் நோக்கில் ஆளும் அதிமுக அரசு செயல்படுகிறது. இந்த வழக்கை சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தில் சந்திப்பேன்” என அவர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker