Latestஇந்தியா

விலங்குகளை பேசவைக்கும் நித்தியானந்தா! டுவிட்டரில் ஏகப்பட்ட ‘மீம்ஸ்’கள்

பெங்களூரு, செப்.23- ஐன்ஸ்டீன் விதியை தவறு என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்திய சுவாமி நித்தியானந்தா தற்போது விலங்குகளை பேச வைக்க தனி மென்பொருளை (Software) கண்டுபிடித்திருப்பதாக கூறி மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

சுவாமி நித்தியானந்தா முதலில் ஆன்மீக சொற்பொழிவாளர் மற்றும் தியான ஆசானாக அறியப்பட்டார். தமிழகம் கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களிலும் தனது ஆசிரமத்தை நிறுவினார். இவரின் ஆன்மீக பேச்சில் ஈர்க்கப்பட்ட பக்தர்கள் கூட்டம் கூட்டமாக அதிகரிக்க தொடங்கினர்.

இதனால், இந்நியா முழுவதும் இவரது புகழ் பரவியது. மேலும் வெளிநாடுகளிலும் இவருக்கு ஆசிரமங்களும் சொத்துக்களும் கோடிக் கணக்கில் சேர்ந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் சுவாமி நித்தியானந்தா தன்னிடம் வரும் பக்தர்களிடம் வலுக்கட்டயாமாக பாலியலில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்த்திராவ் என்ற பெண் புகார் கூறியிருந்தார். அவரது பக்தர்களில் ஒருவரான நடிகை ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா ஒன்றாக இருந்த காட்சிகள் போன்று அம்பலமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இது நித்தியானந்தாவின் புகழை வெகுவாக பாதித்தது. இந்த வழக்கு நீதிமன்றத்திற்கும் சென்றது. அதுவரை நித்தியானந்தா எந்த ஆன்மீக சொற்பொழிவும் நடத்தாமல் இருந்தார்.

அண்மையில் ஐன்ஸ்டீன் கூறிய E=MC2 தவறாக இருக்கின்றது எனக் கூறி புதிய சர்ச்சையை கிளப்பினார். அதற்கு சமூக வலைத்தளத்தில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானார்.

மேலும் விலங்குகளை பேச வைக்க நித்தியானந்தா தனியாக ‘சோப்ட்வேர்’ உருவாக்கி இருப்பதாக அவரே வீடியோவில் தெரிவித்துள்ளார். அதை ஏற்கனவே சோதனை செய்து பார்த்து விட்டாராம். இது மிகவும் நன்றாக வேலை செய்கின்றது சில வருடங்களுக்கு பின் பேச வைக்க போகின்றேன் என்று கூறியுள்ளார்.

குரங்கு, புலி, சிங்கம் உள்ளிட்ட சில விலங்குகளையும் தெளிவாக பேச வைக்க முடியும் என்று பேசியிருக்கின்றார். இந்த விலங்குகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் பேச வைப்பதாக நித்தியானந்தா வீடியோவில் வெளியாக்கி உள்ளார். இது குறித்து அனைத்து ஊடகங்களிலும் செய்தி ஏகப்பட்ட விமர்சனகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் நித்தியானந்தாவை கலாய்க்கும் விதமாக ‘மீம்ஸ் கிரியேட்டர்கள்’ உருவாக்கிய மீம்ஸ்களும், ட்ரோல்களும், பேஸ்புக்கிலும்- டுவிட்டரிலும் #சையின்ஸ்டிஸ்ட்_நித்தியானந்தா என்ற பெயரில் வைரலாகி வருகின்றது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker