Latestமலேசியா

அம்னோவின் ‘அதிகாரத்துவ’ தலைவராக நஜிப் அறிவிப்பதா? அம்னோ எதிர்ப்பு!

கோலாலம்பூர், செப்.24- அம்னோ கட்சியின் ‘அதிகாரத்துவ’ தலைவராக அக்கட்சியின் முன்னாள் தலைவர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் அறிவிக்கப் பட வேண்டும் என்ற பரிந்துரையை அம்னோ நிராகரித்தது

அக்கட்சியின் அரசியலமைப்பு கொள்கையின் படி, நஜிப்பை அக்கட்சியின் உண்மையான தலைவராக அறிவிக்கும் விதி முறைகள் ஏதும் இல்லை. அந்தக் கருத்தும் ஏற்புடையதாக இல்லை என்பதால் அதனை அமல்படுத்த முடியாது என்று அம்னோவின் பொது செயலாளர் டான்ஶ்ரீ அன்வார் மூசா கூறினார்.

பிகேஆர் கட்சி, தங்கள் கட்சியின் உண்மையான தலைவர் ட்த்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தான் என்று அறிவித்துள்ளதைப் போன்று, அம்னோவும் தங்களின் உண்மையான தலைவர் நஜிப் என்று அறிவிக்க வேண்டும் என்று சுங்கை பெசார் அம்னோ கிளைத் தலைவர் டத்தோஶ்ரீ ஜமால் யூனோஸ் நேற்று பரிந்துரை செய்தார்.

அவ்வாறு செய்வதன் வாயிலாக, அம்னோவில் தேவையான மாற்றங்கள் நிகழும் என்று தாம் கருதுவதாக ஜமால் சொன்னார்.

இதனிடையில், அம்னோவின் ஆண்டு பொதுக் கூட்டம் நிகழ்வதிருப்பதை தொடர்ந்து, கட்சி உறுப்பினர்களின் பட்டியல் புதுப்பிக்கப் படும் என்று அன்வார் மூசா சொன்னார்.

“தற்போது அம்னோவில் 3.6 மில்லியன் உறுப்பினர்கள் உள்ளனர். உறுப்பினர்கள் பட்டியலை புதுப்பிக்க குறைந்தப் பட்சம் மூன்று மாதக் கால அவகாசம் தேவைப்படுகிறது. அப்பட்டியல் புதுப்பிக்கப்பட்ட பின்னர், கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும்” என்று அவர் கூறினார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker