Latestஉலகம்

ஆஸி.யில் நாடு கடத்தப்படும் தமிழர்கள்:- பாப் பாடகி மாயா எதிர்ப்புக் குரல்!

சிட்னி, செப் 24- ஆஸ்திரேலியாவில் இருந்து அகதிகள் நாடு கடத்தப்படுவதற்கு ஆஸ்திரேலியன் ஏர்லைன்ஸ் விமானச் சேவை உதவக் கூடாது என எம்.ஐ.ஏ என்று அழைக்கப்படும் பாப் இசைப் பாடகி மாதங்கி என்கிற மாயா அருள்பிரகாசம்  கோரிக்கைவிடுத்தார்.

இலங்கை அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களை பலவந்தமாக நாடு கடத்தும் ஆஸ்திரேலியா அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஆஸ்திரேலியன் ஏர் லைன்ஸ் விமான சேவை உதவக்கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அண்மைய சில நாட்களில் 12 இலங்கையர்களையும் ஓர் ஈராக்கிய பிரைஜையும் ஆஸ்திரேலிய அரசாங்கம் நாடு கடத்தியுள்ள நிலையிலேயே அவர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் நடத்தப்படும் விதம் குறித்த செய்திகள் பயங்கரமானவையாக விளங்குகின்றன.

ஆஸ்திரேலிய அரசாங்கம் அகதிகளையும் புகலிடக் கோரிக்கையாளர்களையும் கௌரவத்துடன் நீதியாக நடத்தாவிட்டால் அந்த அகதிகள் தங்கள் வாழ்க்கையை மீள கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டியது எங்கள் கடமை.

நாடு கடத்தப்படுதல் என்பது ஒரு தீர்வல்ல. இலங்கையில் உள்ள தமிழர்களை பொறுத்தவரை ஐக்கிய நாடுகள் உட்பட பல அமைப்புகள் அங்கு சித்திரவதைகள் -அச்சுறுத்தல்கள் தொடர்வதாக தெரிவித்துள்ளன.

இலங்கையில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆயிரக்கணக்கானவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கான விடை இன்னமும் கிடைக்கவில்லை.

அகதிகள் புகலிடக்கோரிக்கையாளர்கள் நாடுகடத்தும் நடவடிக்கையில் பங்குகொள்ள மறுப்பதன் மூலம் விமானசேவைகள் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான பங்களிப்பை வழங்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளை இலங்கையில் பிறந்த மாதங்கி அருள்பிரகாசம் உள்நாட்டு யுத்தம் காரணமாக புலம் பெயர்ந்து பிரிட்டனில் வசித்து வருகிறார்  மேலும் ஆஸ்திரேலிய அகதிகளுக்காக ஒரு பாடலைப் பாடி வெளியிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker