Latestமலேசியா

அழகிய பெண்ணை பின்தொடர்ந்து சென்ற இளைஞர் மலையில் தொலைந்து போனாரா?

பாவூ,செப்.24- சிங்காய் மலையேறி காணாமல் போன ஸ்டேன்லி கோ என்ற 22 இளைஞர் நேற்று காலையில்தான் பத்திரமாக மீட்கப்பட்டார். ஓர் அழகான பெண் மலர் கொத்து கொடுத்து தன்னை அழைத்துச் சென்றதாக அந்த இளைஞர் கூறியதாக செய்தி அதிவேகமாகப் பரவியது.

எனினும், ஸ்டேன்லி அப்படியே கூறவே இல்லையென அவரது குடும்பத்தினர் அதனை மறுத்துள்ளனர்.

மலையேறச் சென்ற ஸ்டேன்லியை சென்ற வாரம் காலை 8 மணியிலிருந்து காணவில்லையென போலிசில் புகார் செய்யப்பட்டது. அந்த புகாரை அடுத்து மீட்புப் படையினர் ஸ்டேன்லியைத் தேடும் நடவடிக்கையில் களமிறங்கினர்.

ஒரு வாரத் தேடலுக்கு பின் நேற்று ஸ்டேன்லியை மீட்புப்படையின் மீட்டனர். அப்போது, அவர் மிகவும் பலவீனமாகவும், பசியோடு குளிரில் நடுங்கிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவர் குட்டை காற்சட்டை மட்டுமே அணிந்திருந்தார். அவரது சட்டையும் கைப்பேசியும் எப்படி காணாமல் போனதென அவருக்கே தெரியவில்லையாம்.

ஸ்டேன்லி கூச்சிங்கில் கார் விற்பனையாளராக இருக்கிறார். ஶ்ரீ அமானைச் சேர்ந்த அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker