Latestஉலகம்

பிறப்புறுப்பில் பதுக்கப்பட்ட போதைப்பொருள் பெண்ணுக்கு சிறைத்தண்டனை!

லண்டன், செப்.24- ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உள்ளாடை மற்றும் பிறப்புறுப்பிலும்  கொக்கய்ன் போதைப் பொருட்களை மறைத்து வைத்திருந்ததால் அவருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ பகுதியைச் சேர்ந்த லோரன் கார்சன் (வயது 31) இவர் லண்டனுக்கு சுற்றுப்பயணியாக வந்துள்ளார். அப்போது அவரை மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் பின்தொடர்வதை கண்ட அவர் அங்கிருந்த அதிகாரிகள் அவரை மறித்து விசாரித்துள்ளனர்.

அப்போது அவரது வாயில் ஏதோ ஒன்று இருப்பதை அறிந்துள்ளனர். அதைத் தொடர்ந்து அவரை சோதனை செய்த போது உள்ளாடையில் கொக்கைன் மற்றும் போதைப் பொருட்கள் மறைத்து வைத்திருந்ததது தெரிய வந்துள்ளது.

அது மட்டுமின்றி சிக்கி விடக்கூடாது என்பதற்காக மர்ம உறுப்பில் சுமார் 53க்கும் மேற்பட்ட கொக்கய்ன் பொட்டலங்களை மறைத்து வைத்துள்ளார். இதனால் அதிகாரிகள் இதுகுறித்து அவரிடம் கேட்டபோது இது தனக்கு பயன்படுத்தி கொள்வதற்காக அதிகமாக வாங்கியதாக கூறியுள்ளார்.

இதையடுத்து அவரது கைது செய்த போலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இது தொடர்பான வழக்கு நடந்து வருகிறது.
அப்போது அவரிடம் நீங்கள் உங்கள் தனிப்பட்ட காரணத்திற்காக அதை வைத்திருந்தால் ஏன் மறைத்து வைத்திருத்தீர்கள் என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர் லண்டன் வீதியில் முதல் தரம் போதை மருந்துகள் கிடைக்காது என்ற காரணத்தினால் மறைத்து வைத்தேன் என்று வெளிப்படையாக கூறியுள்ளார். அதன் பின் வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker