Latestமலேசியா

பிற மதங்களை தாழ்த்தும் ஸாக்கீரின் சமய பரப்புரை மலேசியாவுக்கு ஏற்புடையதல்ல!- முஜாஹிட்

கோலாலம்பூர்,செப்.24- பிற மதத்தவர்களின் உள்ளங்களை காயப்படுத்தாமல், அவர்களுடன் உறவாடி, அவர்களின் உள்ளங்களை குளிர்படுத்தி வெல்வதே சமூக நல்லிணக்கம். ஒருவர் தமது மதத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அவர்களுக்கு உரிய உரிமைகளை அளித்து சமூக நல்லிணக்கத்தை போற்றிப் பாதுகாப்பதுதான் ஒரு முஸ்லிமின் கடமை என இஸ்லாம் மார்க்கம் அன்பு உத்தரவு போட்டிருப்பதாக பிரதமர் துறை அமைச்சர் டத்தோ முஜாஹிட் யூசோப் ராவா அறிவுறுத்தினார்.

அதிலும் பல்லின மக்கள் வாழும் மலேசியாவில் பிற மதங்களைத் தாழ்த்திப் சமய பிரசாரம் செய்யும் அணுகுமுறை ஏற்றுக்கொள்ளப்படாதென அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். உதாரணமாக, பிற மதங்களை இழிவுப்படுத்திம் விதமான இந்திய இஸ்லாமிய மதப் பரப்புரையாளர் ஸாக்கீர் நாயக்கின் சமய பரப்புரைகளை அவர் சுட்டிக் காட்டினார்.

“எந்த சமயத்தையும் இழிவுப்படுத்தாமல் சமய பரப்புரையைச் செய்ய வேண்டும். அதைத்தான் இஸ்லாமும் வலியுறுத்துகிறது” என முஜாஹிட் பல்லின மக்களிடையான உறவும் பிரச்சனைகளும் என்ற தலைப்பில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றியபோது கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker