Latestசினிமா

பூட்டிய வீட்டுக்குள் தனிமையில் வாழும் கனகா! மர்மம் என்ன?

திருவனந்தபுரம், செப்.24- பல ஆண்டுகளாக பூட்டிய வீட்டுக்குள் தனிமையில் வாழும் கனகா, அப்படி என்ன தான் செய்கிறார் உள்ளே? என்ற பரபரப்பான கேள்விகளுக்கு இடையே அவரது மர்ம வாழ்க்கை நீடித்துக் கொண்டிருக்கிறது.

‘கரகாட்டக்காரன்’ படத்தை தொடர்ந்து நடிகை கனகா தமிழ் தெலுங்கு மலையாளம் என 3 மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்தார்
12 வருடங்கள் சினிமாவில் நடித்து வந்த அவர், அதன் பின் நடிக்கவில்லை. முத்துக்குமார் என்ற என்ஜினியரை அவர் திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது.

ஆனால், முத்துக்குமார் யார் என்றே எனக்குத் தெரியாது என்று கனகா கூறுகிறார். இதற்கிடையில் 2013 ஆம் ஆண்டு ஆலப்புழா மருத்துவமனையில் அவர் மரணமடைந்து விட்டதாக ஒரு தகவல் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால், அந்தத் தகவல் போலியானது என்றும் தனது தந்தை தன்னிடம் உள்ள சொத்துக்களை அபகரிப்பதற்காக இப்படி ஒரு தகவலை பரப்பினார் என்றும் கனகா விளக்கம் அளித்தார்.

அவரது தாயாரான பிரபல நாயகி தேவிகா சம்பாதித்து வாங்கிய ஒரு பழைய பங்களாவில் தான் அவர் வசித்து வருகிறார். தன்னிடமுள்ள சொத்துக்களை யாராவது பறித்து விடுவார்களோ என்ற பயம் அவரின் அடி மனதில் மிகப் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் அதனால் தான் அவர் யாருடனும் பேசிப்பழகுவது இல்லை எனவும் கூறப்படுகிறது.

தன்னுடையே தந்தையே சொத்துக்காக தன்னை துன்புறுத்துகிறார் என கனகாஏற்கெனவே குற்றஞ்சாட்டி வருகிறார். கடந்த சில வருடங்களாக உள்பக்கமாக பூட்டிக் கொண்டு தனிமையில் வசித்து வருகிறார்.

பெரும்பாலும், அவர் வெளியே வருவதில்லை. அண்மையில் நடந்த ஒரு சினிமா சங்கத் தேர்தலில் கலந்து கொண்டு ஓட்டுப் போட்டதாக கூறப்படுகிறது. பூட்டிய வீட்டுக்குள் வருடக் கணக்கில் அவர் வசித்து வருவது அவரை பற்றிய மர்மம் என்பதைக் கண்டறிய பல ஊடகங்கள் தொடர்ந்து முயன்று வருகின்றன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker