Latestமலேசியா

பூப்பந்தை பற்றி நினைக்காதீர்; முதலில் குணமாகுங்கள்!- சோங் வேய்க்கு லின் டான் அறிவுறுத்து

கோலாலம்பூர்,செப்.24- மூக்கில் புற்றுநோய்ப் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் நமது தேசிய நாயகன் டத்தோ லீ சோங் வேயை முதலில் உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுமாறும், பூப்பந்தைப் பற்றி யோசிக்க வேண்டாம் என்றும் 5 முறை உலக சாம்பியனும், 2 முறை ஒலிம்பிக் சாம்பியனுமான சீனாவின் பூப்பந்து வீரர் லின் டான் அறிவுறுத்தியுள்ளார்.

“முதலில் உடல்நலம்தான் முக்கியம். விளையாட்டுத் துறையைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என லின் டான் தமது நண்பரான சோங் வேய்யைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

சோங் வேய் தைவானில் சிகிச்சைப் பெற்று வரும் வேளையில் கடந்த வெள்ளிக்கிழமை அவருக்கு புற்றுநோய் என்ற செய்தி வெளியிடப்பட்டதும் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தது மட்டுமின்றி வேதனையும் அடைந்தனர். இந்நிலையில் இச்செய்தி அறிந்து லின் டான் சோங் வேய்க்கு இவ்வாறு அறிவுரை கூறியுள்ளார்.

சோங் வேய் விரைவில் குணமடைய வேண்டுமென அவர் இறைவனைப் பிரார்த்திப்பதாக வருத்தத்துடன் சீன நாட்டு ஊடகங்களுக்கு பேச்சியளித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker