Latestமலேசியா

‘மஇகா இளைஞர்கள்இடையே புதிய உந்துதல் தேவை!’ -இளைஞர் தலைவர் தினாளன்

கோலாலம்பூர், செப்.24- இளைஞர்கள் மத்தியில் மஇகாவை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சியாக, நாடு தழுவிய அளவில் கட்சியின் டிவிசன்கள் மற்றும் கிளைகளின் இளைஞர் தலைவர்களைச் சந்தித்து விவாதிக்கப் போவதாக மஇகாவின் இளைஞர் பிரிவின் தலைவராக தேர்வு பெற்றுள்ள தினாளன் ராஜகோபாலு தெரிவித்தார்.

அண்மைய மஇகா இளைஞர் பிரிவு வேட்பு மனுத்தாக்கலின் போது தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தினாளன் பின்னர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த வெற்றி குறித்தும் தம்முடைய அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தும் வணக்கம் மலேசியாவுக்கு அளித்த பேட்டியின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அரசியல் போக்கு மாறியிருக்கிறது. இந்த அரசியல் நிலைமைக்கு ஏற்ப மஇகாவின் அரசியல் அணுகுமுறைகள் மாறவேண்டிய கட்டாயமான சூழலில், இளைஞர்களிடையே புதிய உந்துதலை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

நாடு தழுவிய அளவில் மாநில நீதியாகவும், டிவிசன் ரீதியாகவும், கிளைகள் ரீதியாகவும் இளைஞர் பிரிவின் பொறுப்பாளர்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளேன். அவர்களின் எண்ண ஓட்டத்தை முதலில் அறிந்து கொள்ளவேண்டும் என்றார் அவர்.

தலைவர்கள் பேசி, உறுப்பினர்கள் செவி கொடுத்த காலம் கடந்து போய்விட்டது. இனி அதற்கெல்லாம் இடமில்லை. உறுப்பினர்கள் மற்றும் கிளை மட்டத்திலான பொறுப்பாளர்களின் குறிப்பாக இளைஞர் பிரிவினரின் கருத்து என்ன என்பதை அவர்களின் குரலில் செவிமடுக்கவே விரும்புகிறேன் என்று தினாளன் சொன்னார்.

அடுத்து மற்றொரு முக்கிய அம்சம் குறித்தும் தமது சந்திப்பின் போது விவாதிக்கப்படும். குறிப்பாக கடந்த பொதுத் தேர்தலின் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளிக் குவித்தது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி. தற்போது அந்த வாக்குறுதிகளை நிறைவு செய்ய முடியாமல் சாக்குப் போக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறது.

இதனை மஇகா இளைஞர்களுக்குப் புரியவைக்க வேண்டும். அவர்களுடன் இது குறித்து நிறைய விவாதித்து அவர்களின் கருத்தை வெளியே கொண்டுவர வேண்டும். இது மஇகாவைப் பலப்படுத்தப் மிகப் பெரிய உந்துதலாக அமையும். இந்த இரு இலக்குகளை நோக்கியே தமது அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் அமையவுள்ளது என்று அவர் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker