Latestஇந்தியா

மண்ணே உணவு: நாள் ஒன்றுக்கு 3 கிலோ தின்னும் மனிதர்!

பெங்களுரூ, செப்.24- இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் இளைஞர் ஒருவர், நாள் ஒன்றுக்கு மூன்று கிலோ மண் மற்றும் கற்கள் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருப்பது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பக்கீராப்பா ஹூனாகுடி என்ற அந்த இளைஞர் தனது 10 வயது முதலே மண் மற்றும் கற்களை விரும்பி சாப்பிட்டு வருகிறார். இதனால் தனது உடலுக்கு எவ்வித கெடுதலும் இதுவரை ஏற்பட்டதில்லை என கூறும் பக்கீராப்பா, துவக்கத்தில் சிற்றுண்டியாக மண் மற்றும் கற்களை உண்டு வந்ததாகவும் பின்னர் அது அன்றாட உணவாக மாறிவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

தனது உடல் ஆரோக்கிய நிலையில் எவ்வித மாறுதலும் இதுவரை ஏற்பட்டதில்லை எனத் தெரிவித்துள்ள அவர், தனது பற்களுக்கும் எத்தகைய பாதிப்பும் ஏறப்டவில்லை என்கிறார்.

ஆனால், பக்கீராப்பாவின் இந்தப் பழக்கத்தை நிறுத்த குடும்பத்தினர் வெகுகாலமாக முயன்று தோல்வி கண்டு விட்டதாக கூறப்படுகிறது. கோழி இறைச்சியை விட மிகுந்த சுவை தமக்கு கற்களை சாப்பிடும் போது கிடைப்பதாகவே அவர் தெரிவித்துள்ளார்.

 

 Eats Mud, Rocks, And Bricks Instead Of Food!

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker