Latestமலேசியா

மரியாதை நிமித்தமாக பேரா மந்திரி புசாருடன் அமைச்சர் வேதா சந்திப்பு!

ஈப்போ,செப்.24-  பேராக் சென்றிருக்கும் பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தி மரியாதை நிமித்தமாக அம்மாநில மந்திரி புசார் அகமட் பாய்சால் அஸிமுவைச் சென்று சந்தித்தார். இந்தச் சந்திப்பு பயனான சந்திப்பாக அமைந்ததாக அமைச்சர் தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அவர்கள் இருவரும் பேராக் மாநில இந்திய சமூக பிரச்சனைகள் குறித்து கலந்தாலோசித்தது மட்டுமின்றி, தேசிய ஒருமைப்பாட்டு, சமூகநலத் துறைக்கு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில் வேதமூர்த்தி அடுத்தாண்டுக்கான தேசிய ஒருமைப்பாட்டு நிகழ்ச்சிகள் குறித்தும் மந்திரி புசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பில், பேராக் ஹிண்ட்ராப் தலைவர் நாகேஷ், செயலாளர் லிங்கம், அமைச்சரின் அரசியல் செயலாளர் முனியாண்டி பொன்னுசாமியும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker