Latestமலேசியா

மலாயாப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரவையின் “காவிய அரங்கம்” மேடை நாடகம்

கோலாலம்பூர்,செப். 24 –  கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று மலாயாப் பல்கலைக்கழகத்தின் தமிழ் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற காவிய அரங்கம் 2018 எனும் மேடை நாடகம் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.

தொன்மையும் சிறப்பும் வாய்ந்த குறுங்காலக் கலையான இம்மேடை நாடகம் பார்வையாளர்களுக்கு நல்லதொரு படிப்பினையை வழங்கியதோடு, நாடகப் பாத்திரப் படைப்பின் வாழ்வியலையும் பார்வையாளர்களுக்கு எடுத்தியம்பியது. காவிய அரங்கம் 2018, நூற்றுக்கணக்கான பார்வையாளர்களுக்குச் சமூகத்தின் உணர்வை உணர்த்தும் வாய்ப்பைப் பெறுவதற்கான ஓர் அரிய வாய்ப்பாக அமைந்தது.

மேலும், காவிய அரங்கம் எனும் மேடை நாடகம், வந்திருந்த பார்வையாளர்கள், குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் இணைந்து நேரடி அரங்கேற்றத்தினைக் கண்டு களிக்கும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தது.

இந்நிகழ்ச்சியில் முக்கியப் பிரமுகரான பத்து நாடாளுமன்ற உறுப்பினர் உயர்திரு பிரபாகரன் பரமேஸ்வரன் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை மேலும் சிறப்பித்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான மலாயாப் பல்கலைக்கழக மாணவர்களின் 7 மாதக் கடுமையான உழைப்புக்குப் பின்னர், காவிய அரங்கம் 2018 வெற்றிகரமாக நடந்தேறியது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker