Latestஉலகம்

விண்கல் மீது ஆளில்லா ஊர்தி: ஜப்பான் வரலாற்று சாதனை

தோக்கியா, செப்.24- விண்கல்லில் 2 ஆளில்லா  விண்கல ஊர்தியை (ரோவர்) தரையிறக்கி வரலாற்று சாதனை படைத்துள்ளதாக ஜப்பானின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஜாக்ஸா அறிவித்துள்ளது.

ஜப்பானில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஜாக்ஸா, கடந்த 2014 ஆண்டு பூமிக்கு அருகே உள்ள ரயுகு என்னும் விண்கல்லின் மாதிரிகளை சேகரிப்பதற்காக ஹயபுஸா- 2 என்னும் ஆளில்லா விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பியது. இந்த விண்கலம் கடந்த ஜூன் மாதம் 27 ஆம் தேதி ரயுகுவைச் சென்றடைந்தது.

இந்நிலையில் ஹயபுஸாவில் பொருத்தப்பட்டிருந்த மினெர்வா -11 என்று அழைக்கப்படும் ஆளில்லா ஊர்தி, விண்கல் மீது கடந்த சனிக்கிழமை  வெற்றிகரமாக தரையிறங்கியதாக ஜாக்ஸா அறிவித்துள்ளது.

விண்கல்லில் ஆளில்லா ஊர்தியை தரையிறக்கியது இதுவே முதல் முறையாகும். இதன்  மூலம் வரலாற்று சாதனையை ஜப்பான்  படைத்துள்ளது. விண்கல்லில் தரையிறக்கிய ஊர்தியை அங்கு எடுத்து புகைப்படங்களை ஜாக்ஸா அதன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக ஜாக்ஸா குறிப்பிட்டுள்ளதாவது:
இந்த விண்கல்லானது. சுமார் 1 கிலோ மீட்டர் அகலத்தில் தண்ணீர் மற்றும் கரிம பொருட்களை கொண்டுள்ளது.  வைர வடிவத்தில் காட்சியளிக்கிறது. மேலும் இந்த உலகத்தின் தொடக்க வடிவம்  மற்றும் இயக்கம் குறித்து இந்த விண்கல் மூலம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

கடந்த 2003 ஆம் ஆண்டு இதை போன்று  ஹயபுஸா என்ற விண்கலத்தை விண்ணில் அனுப்பிய ஜாக்ஸாவின் முயற்சி தோல்வியில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker