Latestஇந்தியா

விபத்தில் துண்டான சிறுவனின் கால்கள்: மீண்டும் இணைத்த மருத்துவர்கள்!

திருவனந்தபுரம், செப் 24-  கேரள மாநிலத்தில் ரயில் விபத்தொன்றில் இருகால்களும் துண்டான சிறுவனுக்கு நீண்ட மருத்துவ போராட்டத்திற்கு பின்னர் கால்களை இணைத்து நடக்க வைத்துள்ளனர்.

கேரளாவின் பையனூர் பகுதியில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் ரயில் விபத்து ஒன்றில் இரு கால்களும் துண்டான நிலையில் கதறிய சாஹில் என்று சிறுவனை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்தனர்.

சிறுவன் முகமட் சாலே  அவனது துண்டான கால்களையும் அள்ளிக் கொண்டு சென்ற அந்த பெயர் தெரியாதவர்களின் உதவி பின்னர் விலைமதிப்பு மிக்கதாக கருதப்பட்டது.


பின்னர் மங்களூருவில் உள்ள மருத்துவமனையில் 8 மணி நேரம் கடுமையாக போராடிய மருத்துவர்கள் இரண்டரை வயதான சாலேயின் துண்டான கால்களை வெற்றிகரமாக இணைத்துள்ளனர்.

தற்போது சிறுவன் எழுந்து நடக்கும் நிலைக்கு அவனது கால்கள் குணமாகியுள்ளன. கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி பையனூர் ரயில் நிலையத்தில் தாயாருடன் சென்ற நிலையில் விபத்தில் சிக்கி சாலேயின் கால்கள் துண்டானது.

அதே சம்பவத்தின் அவனது தாயார் கொல்லப்பட்டார்.  ஆனால் போலீசாரின் முயற்சியால் மருத்துவமனையில் சிறுவன் சாலே சேர்க்கப்பட்டான்.  அப்போது நான்கு முக்கிய அறுவைச் சிகிச்சைக்கு பின் சலேயின் கால்கள் இணைக்கப்பட்டன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker