Latestமலேசியா

சிறுவனை ஓரினச் சேர்க்கைக்கு உட்படுத்திய மாற்றுத்திறனாளி மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை!

கோலாலம்பூர்,செப்.24- மாற்றுத்திறனாளி கார்ட்டு வைத்திருக்கும் 34 வயது ஆடவன் ஒருவனால் ஓரினச் சேர்க்கைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் 20-ஆவது மாடிப் படியிலிருந்து 19-ஆவது மாடிக்கு தூக்கி வீசப்பட்ட ஆறாம் வகுப்பு மாணவன் இன்று யூ.பி.எஸ்.ஆர் தேர்வு எழுத முடியாமல் போனது.

இச்சம்பவம் செப்டம்பர் 12-ஆம் தேதி பந்தாய் டாலாம் பிபிஆர் குடியிருப்பு பகுதியில் நிகழ்ந்ததாக ‘Komuniti Harmoni Kita’ என்ற அமைப்பைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாஸ்ரிஷாம் கம்ரான் என்பவர் தெரிவித்தார்.

“அந்த மாற்றுத்திறனாளி ஆடவன் மாணவனை 20-ஆவது மாடிக்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று தனது கைப்பேசியில் இருந்த சில ஆபாச காணொளிகளைப் பார்க்க வைத்திருக்கிறான். பிறகு, அந்தக் காணொளியில் பார்த்தது போலவே செய்ய மாணவனைக் கட்டாயப்படுத்தியுள்ளான்” என பாஸ்ரிஷாம் கூறினார்.

அம்மாணவனை அந்த ஆடவன் தூக்கி வீசியதை சிலர் நேரில் பார்த்திருக்கின்றனர். தூக்கி வீசப்பட்டதில் மாணவனின் மூளையில் அதிர்வு ஏற்பட்டது அவர் ஒரு வாரமாக சுயநினைவின்றி மருத்துவமனையில் இருந்திருக்கிறார்.

இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுவிட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட ஆடவன் மனநல நோயாளி என்பதால் அவன் மீத உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதுதான் வருத்தமளிப்பதாக பாஸ்ரிஷாம் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker