Latestஉலகம்

டயானா மரணம், விபத்து அல்ல!- கொலை என்கிறது அமெரிக்க நூல்!

லண்டன், செப் 25- இளவரசி டயானா பழி தீர்க்கப் படுவதற்காக கொலை செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த புத்தக வெளியீட்டு நிறுவனம் ஒன்று வெளியிட இருக்கும் புத்தகம் ஒன்றில் ஓர் அதிர்ச்சித் தகவலை வெளியிடப்பட்டுள்ளது.

சேரா வேல்ன் எனும் எழுத்தாளர் எழுதியுள்ள புத்தகத்தில் பாரிஸில் உள்ள போன்டி அல்மா சாலையிலுள்ள சுரங்கப் பாதையில் வேண்டுமென்றே ஏஏபடுத்தப்பட்ட ஒரு கார் விபத்தில் இளவரசி டயானா மோசமாக காயமடைந்ததாகவும் அவர் இரத்தம் முழுவதும் வெளியேறி மெதுவாக சாக விடப்பட்டதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதற்கு முன்பு, மன்னராக இருந்த எட்டாம் ஹென்றியின் மனைவிகளான அன்-போவின் மற்றும் கெத்திரீன்- ஹோர்வட் ஆகியோர் கொல்லப்பட்டது போலவே டயானாவும் கொல்லப்பட்டதாக சேரா வேல்ன் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

தனக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து வெளியில் சொல்ல டயானா திட்டமிட்டிருந்தார். ஆனால் அதை அவர் இரகசியமாக வைத்துக் கொள்ளவில்லை.

எப்போதும் அவர் ஊடகங்களைச் சந்தித்து வந்திருக்கிறார் என்கிறார் சேரா வேல்ன். டயானா இறக்கும் வரை அவர் பலமுறை கார் விபத்துக்களை சந்தித்து உள்ளதாகத் தெரிவிக்கும் சேரா வேல்ன், அதுவெ டயானா குறிவைக்கப் பட்டதற்கு ஆதாரம் என்கிறார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker