Latestமலேசியா

பாலிங் எம்பி அஸிஸையும் அவரது சகோதரரையும் MACC கைது செய்தது!

புத்ராஜெயா,செப்.25- பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ அஸிஸ் அப்துல் ரஹிம்மையும் அவரது சகோதரரையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இன்று கைது செய்துள்ளது.

இருவரும் விசாரணைக்கு வந்தபோது கைதானதாக கூறப்படுகிறது. எனினும், எதற்காக இருவரும் கைது செய்யப்பட்டனர் என்பது இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இது தொடர்பில் ஆணையம் பின்னர் அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுபாங் ஜெயா, சிலாங்கூர், கெடா ஆகிய பகுதிகளிலுள்ள சில சொத்துடமைகளுக்கும் அஸிசுக்கும் தொடர்பு இருப்பதாகவும், அதனால் அவரை ஊழல் தடுப்பு ஆணையம் தேடுவதாகவும் வெளிவந்த செய்திகளுக்கு பின்னர் அஸிஸ் எல்லோர் கவனத்தையும் ஈர்த்தார்.

ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு புதிய தலைவர் வந்ததும்தான் இது போன்ற உண்மைகள் வெளி வந்தன. அஸிஸிடமிருந்து 5 லட்சம் ரிங்கிட் ரொக்கப் பணமும், விலை உயர்ந்த கைக்கடிகாரமும் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் அம்னோவுடையது என்றார் அஸிஸ். அதுமட்டுமின்றி, அந்த கைகடிகாரங்களின் ஒரு பகுதி போலி பொருட்களால் ஆனது என்று அஸிஸ் கூறினார்.

இந்த விவகாரம் வெடித்த சமயத்தில்தான் அஸிஸ் தாபோங் ஹஜ்ஜி தலைவர் பதவியிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker