Latestமலேசியா

பிகேஆர் தேர்தல்; பெர்சே பொறுப்பேற்குமா?

கோலாலம்பூர், செப்.25- பிகேஆர் கட்சித் தேர்தலின் வாக்களிப்பு முறையை கண்காணிக்க பெர்சே அமைப்பிற்கு அனுமதி வழங்கப் பட வேண்டும் என்ற பெர்சேவின் பரிந்துரையை தாம் வரவேற்பதாக பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சொன்னார்.

இருந்த போதிலும், கட்சித் தேர்தல் நடந்துக் கொண்டிருக்கும் இந்தத் தருவாயில், பெர்சேவை நடுவில் உள்ளே நுழைப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என்று அவர் குறிப்பிட்டார்.

“அந்தப் பரிந்துரை ஏற்புடையதாக உள்ளது. ஆனால், கட்சித் தேர்தல் தொடங்கி விட்டது. இவ்வேளையில், பெர்சேவை நான் உள்ளே அழைத்து வர முடியாது. தொடங்கிய கட்சித் தேர்தல், எவ்வித களங்கத்திற்கும் ஆளாகாமல், சுமூகமாக நடைபெற வேண்டும்.

“கட்சித் தேர்தல் குறிப்பிட்ட காலக் கட்டத்திற்குள் நடத்தி முடிக்கப் பட வேண்டிய அவசியம் உண்டு. சங்கங்களின் பதிவகமும் எங்களுக்கு குறிப்பிட்ட கால அவகாசத்தை தான் வழங்கியுள்ளது” என்று அவர் கூறினார்.

கடந்த சனிக்கிழமையன்று, பிகேஆர் கட்சித் தேர்தலுக்கான புதிய மின்னணு வாக்கு அமைப்பு முறையில் பல கோளாறுகள் நிகழ்ந்தன. அதனைத் தொடர்ந்து, அவ்வாறான தவறுகள் தொடராத வகையில், அந்தத் தேர்தல் வாக்களிப்பு முறையை கண்காணிக்க தங்களுக்கு வாய்ப்பு வழங்கப் பட வேண்டும் என்று பெர்சே அமைப்பு பிகேஆரை கேட்டுக் கொண்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker