Latestமலேசியா

மரண சான்றிதழ் இன்றி வாக்காளரின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதா?

புத்ராஜெயா,செப்.25- ஒரு வாக்காளருக்கு 100 வயதுக்கு மேலானால் அவருடைய மரண சான்றிதழ் இன்றி அவரது பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் எடுத்துவிட முடியாது என புதிய தேர்தல் ஆணையத் தலைவர் அஸார் ஹருண் கூறினார்.

“100 வயதுள்ள வாக்காளர்கள் தங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என புகார் அளித்திருந்தது எனக்குத் தெரியும். மரண சான்றிதழ் இல்லாமல் நாம் அவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கவே கூடாது. அப்படிச் செய்தால், அவர்கள் நம் மீது வழக்குத் தொடுக்கலாம்” என அவர் விவரித்தார்.

முந்தைய தேசிய முன்னணி அரசாங்கத்தின் ஆட்சியின்போது எதிர்க்கட்சியினர் இந்த விவகாரம் குறித்து அடிக்கடி கேள்வி கேட்டிருந்ததாகவும், ஆனால் தேர்தல் ஆணையம் அதை பொருட்படுத்தவே இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

“தேசியப் பதிவுத் துறை ஒருவர் இறந்து விட்டார் என உறுதிப்படுத்தியதும்தான் தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட நபரின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். விருப்பம் போல வாக்காளர்களின் பெயரை நீக்க சட்டத்தில் இடமில்லை” என்றாரவர்.

ஆர்ட் ஹருண் என்றழைக்கப்படும் அஸார் ஹருண் ஒரு வழக்கறிஞர் ஆவார். துன் மகாதீரின் தீவிர ஆதரவாளரான அவர் கடந்த வாரம் தேர்தல் ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டார். தேர்தல் ஆணையத் தலைவர் நாடாளுமன்றச் செயற்குழுவின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அஸாரின் நியமனத்தில் அந்த விதியைக் கடைப்பிடிக்காதது ஏன் என பலரும் விமர்சித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker