Latestமலேசியா

ரங்கோலியில் துன் மகாதீர்; அசத்திய ஜொகூர் ஓவியர்!- (video)

ஜொகூர்,செப்.25- ஜொகூர் பாருவைச் சேர்ந்த மணிவண்ணன் சுப்ரமணியம், பிரதமர் துன் மகாதீர் உருவத்தை ரங்கோலி மூலம் வரைந்து அசத்தியுள்ளார். அவர் வரைந்த அந்த ரங்கோலி கோலம் மிகப் பெரிய கோலம் என்று மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

கோலப் பொடிகளைப் பயன்படுத்தி துன் மகாதீர் உருவத்தை மணிவண்ணன் தத்ரூபமாக வரைந்து அசத்தி உள்ளார். ரங்கோலியில் துன் மகாதீர் உருவத்தை பார்த்த பொது மக்கள் மணிவண்ணனின் திறமையை பாராட்டி வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதியன்று சிகாமாட் செண்ட்ரல் பேரங்காடியில் அவர் இந்த ரங்கோலியை வரைந்தார். இந்த ரங்கோலி, 15.12 மீட்டர் உயரமும், 6.07 மீட்டர் அகலமும் கொண்டதாகும்.

மணிவண்ணன் வரைந்த ரங்கோலியை நேரில் இருந்த பார்வையிட்ட பின்னர் மறுநாள் அதாவது செப்டம்பர் 22-ஆம் தேதி அவருக்கு மலேசிய சாதனை புத்தகச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Posted by Sivanesan Karathihayan on Saturday, 22 September 2018

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker