Latestஉலகம்

வதந்திகளால் இந்தியாவில் வன்முறைகள்: தடுக்க வாட்ஸ்-அப் நிறுவனம் நடவடிக்கை

புதுடில்லி, செப். 25- சமூக வலைத்தளங்களில் முதன்மை இடத்தை வகிக்கும் பேஸ்புக்- வாட்ஸ்-அப் போன்ற செயலிகள் மூலம் சமீப காலமாக பல்வேறு வதந்திகள் பரவி வருவதால், இந்தியாவில் பல வன்முறைகள் நடப்பதை தடுக்க வாட்ஸ் -அப் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வாட்ஸ் -அப் வதந்திகள் நாட்டின் பல பகுதிகளில் வன்முறை சம்பவங்களுக்கும் உயிரிழப்புகளுக்கும் காரணமாகி விடுகின்றன.

இதனால், தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் வாட்ஸ்-அப் செயலி மூலம் வதந்திகள் பரவுவதை தடுக்க முயற்சி எடுக்க வேண்டும் என வாட்ஸ்- அப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிறிஸ் டேனியலுடன் கடந்த மாதம் நடைபெற்ற சந்திப்பின் போது கோரிக்கை வைத்தார்.

மேலும், இந்தியாவுக்கென தனி மையம் அமைத்து வாட்ஸ்-அப் நிறுவனம் செயல்படவும் இத்தகைய குறைகளைக் களைய அதிகாரியை நியமிக்கவும் வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இந்நிலையில் மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று கோமல் லகிரி என்பவரை இந்தியாவுக்கான குறை தீர்ப்பு அதிகாரியாக நியமித்ததை வாட்ஸ்-அப் நிறுவனம் அறிவித்துள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker