Latestமலேசியா

5 நாட்களாக காணாமல் போனதாக தேடப்பட்ட மாதுவின் சடலம் கழிவுத் தொட்டியில் மீட்பு; மகன் கைது

பினாங்கு,செப்.25- ஜோர்ஜ் டவுனில் நேற்று பெற்ற தாயைக் கொன்று கழிவுத் தொட்டியில் போட்ட ஆடவனை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.

அந்த ஆடவன் பாலிக் புலாவவில் கைது செய்யப்பட்டதாக பாராட் டாயா மாவட்ட போலீஸ் தலைவர் அன்பழகன் தெரிவித்தார்.

செப்டம்பர் 19-ஆம் தேதியிலிருந்து அந்த ஆடவனின் தாயாரைக் காணவில்லை என அனைவரும் தேடிக் கொண்டிருந்தனர். ஆனால் நேற்று மாலை சுங்கை பூரோங்கிலுள்ள அவரது வீட்டின் பின்புறம் இருந்த கழிவுத் தொட்டியில் அந்த மாதுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டதும் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

அம்மாதுவை அவரது மகனே கடந்த புதன்கிழமையன்று கொலை செய்து கழிவுத் தொட்டியில் உடலை மறைத்து வைத்திருக்கிறார் என நம்பப்படுகிறது. அம்மாதுவின் சடலம் 1.2 மீட்டர் ஆழமுள்ள கழிவுத் தொட்டியில் மிதப்பதை அவரது மருமகள் நேற்று பிற்பகல் 2 மணியளவில் பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker