Latestசினிமா

‘என் அப்பா விஜயகுமாருக்கு எந்த தகுதியும் கிடையாது!’ -மகள் வனிதா

சென்னை, செப். 26- ‘எனது தந்தை நடிகர் விஜயகுமாருக்கு இரண்டு மனைவிகள். எனது வாழ்க்கையை குறித்து கேட்பதற்கு அவருக்கு எந்த தகுதியும் கிடையாது’ என அவரது மகள் வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வனிதா விஜயகுமார் பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

‘எனது குடும்பத்துக்கு நான் அச்சுறுத்தலாக இருக்கிறேன். இதன் காரணத்தினாலேயே எனக்கும் எனது தந்தைக்கும் அடிக்கடி பிரச்சனை இருந்து கொண்டே இருக்கிறது.

எனது சகோதரிகள் எனக்கு பிரச்சனையில்லை. ஆனால் அவர்கள் பின்னணியில் இருக்கும் ஆண்கள் தான் என்னுடன் மோதுகிறார்கள். சகோதரர் அருண் விஜய் எனது தந்தைக்கு அழுத்தம் தருகிறார். மருமகன் ஹரியும் வேறு பக்கம் அழுத்தம் தருகிறார்.

எனது குடும்பத்தில் நான் மிகவும் தைரியமானவள். என்னுடைய இந்த குணம் அவர்களுக்கு ஓர் அச்சுறுத்தலாக இருக்கலாம். எனது அம்மா மஞ்சுளா பெயரில் இருக்கும் சொத்துக்களை விற்று புதுச் சொத்து வாங்குவார் என் தந்தை.

வாங்கப்பட்ட புதுச் சொத்தில் ஏதாவது பிரச்சனை இருப்பதாக கூறி எனது அம்மாவை நம்ப வைத்து அந்த சொத்தினை அவரது முதல் மனைவி முத்து கண்ணு பெயரில் எழுதி வைப்பார். அதன் பின்னர் அந்தச் சொத்து அப்படியே அருண் விஜய் பெயரில் மாற்றப்படும்.

எனது தந்தை சம்பாதித்த பணத்தை அண்ணன் அருண் விஜய் அழித்து விட்டார். அவருக்கெல்லாம் இப்போது படங்களில் ‘சான்ஸ்’ கிடைப்பதே பெரிய விஷயம். அதனால் அவருக்கு வருமானம் எப்படி வரும்?.

எனது தந்தையிடம் இருந்து அவரும் அவரது அம்மாவும் பணத்தினை எதிர்பார்த்து இருக்கின்றனர். இதுதான் எங்கள் குடும்பத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. நான் பயந்து ஓட வேண்டும் இது தான் அவர்கள் என்னிடம் எதிர்பார்க்கிறார்கள்.

நான் இரண்டு திருமணம் செய்து கொண்டதை பற்றி பேசுகிறார்கள். அப்படியென்றால் எனது அப்பாவுக்கும் இரண்டு மனைவி. அவர் ஒன்றும் ஸ்ரீராம புத்திரன் கிடையாது. அவருக்கு என்னைப் பற்றி கேட்பதற்கு எந்த தகுதியும் கிடையாது என்று நடிகையான வனிதா விஜயகுமார் சாடினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker