Latestஉலகம்

10 நாளில் 17 தம்பதிகளைப் பிரித்த நடிகர் டேனியல் ஸ்லோஸ்

எடின்பரோ, செப்.26- ஸ்காட்லாந்தை சேர்ந்த நகைச்சுவை நடிகரின் நிகழ்ச்சியை பார்த்து இதுவரை 4,000 காதலர்கள் பிரிந்துள்ளதோடு , கடந்த 10 நாட்களில் மட்டும் 17 தம்பதியர் மணமுறிவு பெற்றுள்ளனர்.

நெட்பிலிக்ஸ், இணைய தளத்தில் நகைச்சுவை நடிகர் டேனியல் ஸ்லோஸ் என்பவரின் நிகழ்ச்சி தொடர்நது ஒளிபரப்பட்டு வருகிறது. நேரடி நிகழ்ச்சிகள் அதிகமாக நடத்துவதை டேனியல் வழக்கமாக கொண்டுள்ளார். அவர் நடத்திய ஒரு நிகழ்ச்சியை பார்த்து விட்டு 4,000 காதலர்கள் பிரிந்துள்ளனர்.

கடந்த 11 ஆம் தேதி டேனியல் பேசிய நிகழ்ச்சியை பார்த்து விட்டு பத்து நாளில் 17 தம்பதியர் மணம் முறிவைப் பெற்றனர். உறவுமுறை குறித்த நகைச் சுவைகளை அதிகம் பேசும் டேனியல், விருப்பமில்லாத உறவு முறையில் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கக் கூடாது எனச் சொல்கிறார்.

அவரின் நகை சுவைப் பேச்சு பலரையும் ஈர்க்கும் நிலையிலேயே இது போல நடக்கிறது . டேனியல் பேச்சை ரசித்து விவாகரத்து கோரிய ரசிகர் ஒருவர், சமூகவலைத் தளத்தில் எழுதுகையில் ”மூன்று ஆண்டுகளாக மோசமான திருமண வாழ்க்கையில் நான் இருந்தேன். உங்கள் நிகழ்ச்சியை பார்த்ததும் தெளிவு வந்துவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார். டேனியல் நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு தொடர்ந்து கிடைத்து வருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker