Latestமலேசியா

அன்வாரை எதிர்த்து பி.ஆர்.எம் கட்சி போட்டி!

கோலாலம்பூர்,செப்.27- பார்ட்டி ரக்யாட் மலேசியா (PRM) ஏற்கெனவே கூறியது போல போர்ட்டிக்சன் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள தனது வேட்பாளரை அக்கட்சி இன்று அறிவித்துள்ளது.

அந்தக் கட்சி நிறுத்தும் வேட்பாளரான 42 வயது அகமட் கமாரூடின் முன்னாள் பிகேஆர் கட்சி உறுப்பினர் ஆவார்.

வரும் அக்டோபர் 13-ஆம் தேதி பிகேஆர் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம்மை எதிர்த்து போட்டியிடவுள்ள கமாரூடின், அன்வார் தனது அரசியல் கனவை நிறைவேற்றுவதற்காக சிலரை பலிகடா ஆக்கியுள்ளார் என கூறினார். அப்படித்தான், போர்ட்டிக்சன் எம்பி டன்யாலையும் பலிகடா ஆக்கியுள்ளார் அன்வார் என்றாரவர்.

இது அன்வார் போட்டியிடும் மூன்றாவது இடைத்தேர்தல் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker