Latestமலேசியா

1எம்டிபி: பெரிய ‘மீனை’ பிடிக்க தனி முயற்சி’! –பிரதமர் மகாதீர்

நியூயார்க், செப்.27- சீனாவில் தலைமறைவாக இருப்பதக உள்ளதாக நம்பப்படும் மலேசியாவினால் தேடப்படும் ஜோ லோவை மலேசியாவிற்கு திரும்ப அழைத்து வர, மலேசியா தனிப்பட்ட முயற்சியை இறங்கவுள்ளதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

1எம்டிபி நிதி முறைக்கேட்டில் சம்பந்தப் பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளதால், உடனடியாக அனைவரையும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

“முதலில் பெரிய மீன்களை பிடிக்க நாங்கள் முயற்சிக்கிறோம். சட்டத்தை பின்பற்றுவதால், அவற்றை செயல்படுத்த எங்களுக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது” என்று அவர் சொன்னார்.

மலேசியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் ஆள் ஒப்படைப்பு ஒப்பந்தம் ஏதும் கையெழுத்திடப் படாத காரணத்தால், ஜோ லோவை மலேசியாவுக்கு கொண்டுவர சில தனிப்பட்ட முயற்சிகளை அது எடுத்துள்ளதாக மகாதீர் வெளிநாட்டு உறவுகள் மன்றத்தில் கூடியிருந்த பேராளர்கள் முன்னிலையில் கூறினார்.

“ஜோ லோவை சீனா மறைத்து வைத்துள்ளது என்று நாங்கள் குறை கூற முடியாது. அதனால் தான், அவரை மீண்டும் மலேசியாவிற்கு அழைத்து வருவதற்கு நாங்கள் தனிப்பட்ட முயற்சிகளை எடுக்கவுள்ளோம்” என்று அவர் சொன்னார்.

1எம்டிபி நிதி முறைகேடுகளின் பின்னணியில், சாமர்த்தியமாக எவ்வாறு களவாடுவது என்பது குறித்த திட்டங்களை ஜோ லோவ் தான் திட்டமிட்டு செயல்படுத்தினார் என்று கூறப்படுகிறது.

கடந்த வாரம், 1எம்டிபி நிறுவனத்திலிருந்து ரிம.2.3 பில்லியனை களவாடியதாக முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் மீது 25 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. தம்மீதான குற்றங்களை மறுத்து அவர் மேல் விசாரணை கோரியுள்ளார்.

1எம்டிபி நிறுவனத்திலிருந்து திருடப்பட்ட பணத்தை 50 பேர் பங்கு போட்டுக் கொண்டுள்ளனர் என்று சம்பந்தப்பட்ட தரப்பின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தாம் சீன உளவுத் துறையின் சொத்து என்று ஜோ லோவ் தன்னைப் பற்றி கூறியுள்ளது தொடர்பான கேள்விக்கு, சீனா அவரை தனது உளவுத் துறை சொத்தாக கருதுவதாக தனக்கு தோன்றவில்லை என்றும் சீன அரசாங்கத்திற்கு லோவ் மீது எவ்வித மரியாதையும் உண்டு என்று தாம் நம்பவில்லை என்றும் மகாதீர் பதிலளித்தார்.

அப்படி இருக்கும் பட்சத்தில், ஏன் சீனா ஜோ லோவ்வை மலேசியாவிற்கு அனுப்ப மறுக்கிறது என்ற கேள்விக்கு, சீனா அவரை பேரம் பேசும் ‘சிப்பாக’ உபயோகிக்க எண்ணம் கொண்டிருக்கலாம் என்று மகாதீர் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker