Latestமலேசியா

கார் வாங்கியதற்காக வீடியோ செய்த அர்ஜுனன்!- (video)

கோலாலம்பூர்,செப்.27- கார் வைத்திருப்பது சமூகத்தின் அந்தஸ்த்தாக பார்க்கப்படுவதால் பலர் எவ்வளவு கஷ்டப்பட்டாவது ஒரு காரை வாங்க வேண்டும் என்று நினைத்து வருகின்றனர். கார் வாங்குவதை சிலர் தங்களின் வாழ்க்கைக் குறிக்கோள்களில் ஒன்றாகவே கருதுகின்றனர். அந்த வகையில் தனக்குப் பிடித்த ஹோண்டா சிட்டி காரை வாங்கி தனது கனவை நிறைவேற்றியிருக்கிறார் அர்ஜுனன் செல்லப்பன் என்பவர். ஹோண்டா சிட்டி காருக்கு உரிமையாளராகிய சந்தோஷத்தில் காணொளி செய்து அர்ஜுனன் கொண்டாடி இருக்கிறார்.

அர்ஜுனனின் அந்தக் காணொளி தற்போது பேஸ்புக் அகப்பக்கத்தில் வைரலாகியுள்ள நிலையில் அவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளார்.

அர்ஜுனன் தனது புதுக் காரை பத்துமலைத் திருத்தலத்திற்கு கொண்டுச் சென்று குடும்பத்தோடு பூஜை செய்துள்ளார்.

“சிறு வயதில் இருந்து பல கனவுகளை நம்முள் நாம் வளர்த்துக்கொள்வது உண்டு. ஆனால் நாளடைவில் சூழ்நிலைக் காரணமாக நம் கனவுகளை மறந்து விடுவோம். நம்மால் முடியாது என்று அதை அப்படியே புதைத்தும் கூட விடுவோம்.

ஹோண்டா சிட்டி காரை வாங்குவது எனது கனவு மட்டுமல்ல. எனது தாயாரின் ஆசையும் கூட. அதனால், முயற்சி செய்து எனது சொந்த உழைப்பால் இந்த காரை வாங்கினேன்” என அர்ஜுனர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Buat Video untuk beli kereta baru #Honda #City

Posted by My Eye Times on Tuesday, 25 September 2018

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker