Latest

கில்லாடி ஜோ லோவின் வாழ்க்கை கதை: படம் தயாரிக்கிறார் நடிகை மிஸெல் இயோ!

கோலாலம்பூர்,செப்.28- தேடப்பட்டு வரும் மலேசிய கோடீஸ்வரரான ஜோ லோவை மையமாக கொண்டு எழுதப்பட்ட பில்லியன் டாலர்ஸ் வேல் – (Billion Dollar Whale – பில்லியன் டாலர்ஸ் திமிங்கலம்) என்ற நூலை அடிப்படையாக கொண்ட திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கும் திட்டத்தில் மலேசியாவின் முன்னணி அனைத்துலக நடிகையான டான்ஶ்ரீ மிஸெல் இயோ இறங்கியுள்ளார்.

ஹாலிவுட் நடிகையான மிஸெல் இயோ, அண்மையில் எஸ்.கே. குளோபள்ஸ் ஐவன்ஹோ பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து திரைப்படங்கள் தயாரிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். அந்த வகையில் இந்த ஒப்பந்தத்தின் கீழ் அவர் தயாரிக்கப்போகும் முதல் படமாக ‘பில்லியன் டாலர்ஸ் வேல்’ அமையவிருக்கிறது.

மலேசியாவைவும் உலகையும் உலுக்கிய 1எம்டிபி நிதி முறைகேட்டின் பின்னணியில் மிக முக்கிய புள்ளியாக விளங்கும் ஜோ லோவ், மகா பெரிய கில்லாடி என்று ஊடகங்கள் வர்ணிக்கின்றன.

ஹாலிவுட் மற்றும் வால் ஸ்ட்ரீட் வட்டாரத்தையே முட்டாளாக்கியவர் இவர் என்றும் அவரின் அனைத்துலக நிதி முறைகேடு, உல்லாச வாழ்க்கை, ஹாலிவுட் நடிகைகள் வட்டாரத்தில் அவரது கூத்துக்கள் என்று பல்வேறு கோணங்களை உள்ளடக்கிய ‘பில்லியன் டாலர்ஸ் வேல்’ என்ற நூல், அண்மையில் மிகப் பரபரப்பாக விற்பனைக்கு வந்துள்ளது.

வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் பத்திரிகையைச் சேர்ந்த இரு புலனாய்வுச் செய்தியாளர்கள் இந்த நூலை எழுதியுள்ளனர். மலேசியாவின் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் சப்பந்தப்பட்டுள்ள 1எம்டிபியின் நிதி முறைகேட்டு தொடர்பான பின்னணியில் முக்கிய புள்ளியாக செயல்பட்டவர் ஜோ லோவ். தற்போது தலைமறைவாக இருக்கும் இவரை கைது செய்ய மலேசியா பெரிதும் முயன்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker