Latestமலேசியா

சிறுமியை பலாத்காரம் செய்த 9 இளைஞர்கள் கைது!

தைப்பிங், செப்.28- 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சம்பந்தபட்ட 9 பதின்மவயதினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து நேற்று முன்தினம் பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த போலீஸ் புகாரை அடுத்து, அவர்கள் அனைவரும் நேற்றிரவு 9-லிருந்து 11 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் கமுண்டிங்கில் என்ற பகுதியில் பிடிபட்டனர்.

பிடிபட்ட இளைஞர்கள் 15-லிருந்து 17 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஆவர். அவர்களை அக்டோபர் 2-ஆம் தேதி வரை தடுத்து வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி, தைப்பிங் தாமான் தாசேக் ஏரி பூங்காவும் பாதிக்கப்பட்ட சிறுமியும் அவளது தோழியும் சென்றிருந்தபோது காலை மணி 11-க்கு இரண்டு இளைஞர்கள் அவர்களை மோட்டார்சைக்கிளில் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அந்த இளைஞர்களில் ஒருவரின் வீட்டுக்கு அந்தச் சிறுமிகள் கொண்டு செல்லப்பட்டனர்.பாதிக்கப்பட்ட சிறுமியை அந்த வீட்டில் அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. மறுநாள், அதே வீட்டுக்கு அந்தச் சிறுமி அழைத்துச் செல்லப்பட்டு, 8 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. வேறொரு நாளும் அதே போன்ற வன்முறை தாக்குதல் அந்தச் சிறுமி மீது நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker