Latestஉலகம்

அடக்குமுறை தட்டிக் கேட்காத ஆங் சான் சூச்சி! -கனடா கோபம்

நைப்பியிடாவ், செப்.29- மியான்மார் நாட்டில் பிரதமர் பதவிக்கு இணையான பதவியாகிய அரசு ஆலோசகர் எனும் பொறுப்பு
வகித்து வரும் ஆங் சாங் சூச்சிக்கு கனடா வழங்கியிருந்த கௌரவ குடியுரிமையை அந்நாடு அதிரடியாக பறிக்க முடிவு
செய்துள்ளது.

மியான்மாரில் ரோஹின்யா முஸ்லீம்கள் ஒடுக்கப்படுவதை கண்டு, உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. மியான்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக குரல் கொடுத்து வீட்டுச் சிறையில் அடைபட்டுக் கிடந்த ஆங் சாங் சூச்சி, அப்படிஉஒரு அடக்கு முறையை இப்போது  தட்டிக் கேட்கவில்லை.

அண்மையில்  ஐ.நா உண்மையறியும் குழு ஒன்று மியான்மார் இராணுவம் சிறுபான்மை முஸ்லீம்கள் மற்றும் பிற சிறுபான்மை
மக்களுக்கு எதிராக இன அழிப்பில் ஈடுபட்டதை உறுதி செய்தது.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சூச்சி,  தனது சொந்த நாட்டு மக்களை காப்பாற்றாமல் இராணுவத்தின்
அத்துமீறலை வேடிக்கை பார்ப்பதாக பலத்த விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில் ஆங் சாங் சூச்சிகிக்கு வழங்கியிருந்த கௌரவ குடியுரிமையை பறிக்க கனடா முடிவு செய்துள்ளது. அதே
போல் கௌரவ  குடியுரிமையை பறிப்பதும் நாடாளுமன்ற வாக்கெடுப்பின் மூலமாகவே முடிவு செய்யப்பட்டு ஏகமனதாக
குடியுரிமை பறிப்பது தொடர்பான ஒரு மசோதாவை நிறைவேற்றினர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker