Latestமலேசியா

குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்தக் கோரி போர்ட்டிக்சனில் PSM போராட்டம்!- (video)

போர்ட்டிக்சன்,செப்.29- போர்ட்டிக்சனில் இன்று நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி அங்கு மலேசிய சோசியலிஸ்ட் கட்சி (பிஎஸ்எம்) தனது ஆதரவாளர் படையுடன் ஒன்று திரண்டு தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டது.

PRK Port Dickson semakin hangat!

Posted by Parti Sosialis Malaysia on Friday, 28 September 2018

அண்மையில் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் அறிவித்திருந்த 1,050 ரிங்கிட் குறைந்தபட்ச சம்பள முறைக்கு எதிராகவும் இந்தப் போராட்டம் அமைந்தது.

“குறைந்தபட்ச சம்பளம் மக்களின் முக்கியப் பிரச்சனையாகும். இந்த இடைத்தேர்தலில் இந்த மக்கள் பிரச்சனையை முன்வைப்பதற்காக இங்கு பிஎஸ்எம் ஒன்று கூடியுள்ளது” என அக்கட்சியின் மத்தியச் செயலவை உறுப்பினர் ஏ.அருட்செல்வன் தெரிவித்தார்.

அடுத்தாண்டு ஜனவரி முதலாம் தேதியில் இருந்து குறைந்தபட்ச சம்பளமாக 1,050 ரிங்கிட் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்தது. வெறும் ஐம்பதே ரிங்கிட் தான் உயர்த்தப்பட்டதில் பிஎஸ்எம் உட்பட பல தரப்பினருக்கு உடன்பாடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

PRK Port Dickson semakin hangat!

Posted by Parti Sosialis Malaysia on Friday, 28 September 2018

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker