Latestமலேசியா

2020 ஒலிம்பிக்கின் எடை தூக்கும் பிரிவில் அசத்த சகோதரிகள் இலக்கு!

ஜோர்ஜ் டவுன்,செப்.29- முழுவளர்ச்சி பெற்ற பெண்கள் தூக்கக்கூடிய எடையான 45 கிலோ எடையை தூக்கி தங்களுடைய தோள்பட்டையில் வைக்கக் கூடிய ஆற்றல் கொண்ட இளம் எடை தூக்கும் வீராங்கனைகளான டி . துர்க்காஶ்ரீயும் லோகேஸ்ஶ்ரீயும் உருவெடுத்து இருக்கிறார்கள். துர்க்காஶ்ரீக்கு வயது 12 தான் ஆகிறது. மாறாக, லோகேஸ்ஶ்ரீக்கு 16 வயதாகும்.

2020-இல் ஜப்பான், தோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், எடை தூக்கும் பிரிவில் மலேசியாவின் பெயரை மணம் கமழச் செய்ய இந்த இரு சிறுமிகளும் இலக்கு கொண்டுள்ளனர்.

“நாங்கள் அன்றாடம் பள்ளிக்குச் செல்லும் முன் காலை 5-லிருந்து 6 மணி வரை பயிற்சி செய்கிறோம். பள்ளி முடிந்து வந்ததும் சிறிது நேரம் ஓய்வு எடுத்த பிறகு மாலை 4 மணிக்கு மீண்டும் பயிற்சி மேற்கொள்வோம். 3 மணி நேரம் பயிற்சி செய்வோம்” என்றார் லோகேஸ்ஶ்ரீ.

அவர்களின் பயிற்றுநர் வேறு யாருமில்லை. அவர்களின் தந்தையார் எம்.தனபாலசிங்கம் தான். அண்மையில் பேரா சுக்மா விளையாட்டுப் போட்டியில் அச்சிறுமிகள் பங்கு கொண்டனர். அடுத்தாண்டு நடைபெறும் சீ விளையாட்டுப் போட்டியிலும் அவர்கள் பங்கேற்பார்கள் என 46 வயது தனபாலசிங்கம் தெரிவித்தார்.

தனது மகள்களுக்கான தேகப் பயிற்சிகளில் ஒவ்வொரு நாளும் 5.2 கிலோமீட்டர் தூரம்ம் ஓடுவதும் அடங்கும். அதுமட்டுமின்றி, அவர்களுக்கு கார்போஹிட்ராட் குறைவான, புரோட்டின் சத்து நிறைந்த உணவுகளைத்தான் வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு 10 முட்டைகளும் பாதி நாட்டுக் கோழியும் உண்ண வழங்குகிறார் தனபாலசிங்கம். அவர் தனது மகள்களுக்கான உணவுக்கு மட்டும் மாதம் அவர் 3,000 ரிங்கிட் செலவு செய்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker