Latestமலேசியா

அம்னோ பதிவு ரத்தாக்கப்படுமா? பேராளர்கள் அச்சம்!

கோலாலம்பூர், செப். 30- அம்னோவின் பதிவு ரத்து ஆகாமல் தடுப்பதற்கான வழிவகைகளைக் கண்டறியவேண்டும் என்று கட்சியின் தலைமைத்துவத்திற்கு அம்னோ பேராளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பதிவு ரத்தாகும் சாத்தியங்கள் குறித்தும் அதன் எதிர்காலம் குறித்தும் இங்கு நடந்த அம்னோ பேராளர்கள் மாநாட்டில் அவர்கள் கவலை தெரிவித்தனர்.

கட்சியின் எதிரிகள் நம்மை தேர்தலில் தோற்கடிக்க முயற்சிக்கிறார்கள் என்பது மட்டுமின்றி, கட்சியை இழுத்து மூடிவிடவும் முயற்சிக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் கட்சியின் பதிவு ரத்தானால், அதனைத் தடுக்க கட்சி தலைமைத்துவம் எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது என அவர்கள் கேள்வி எழுப்பினர்.

கட்சிக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது. இதுதான் நமது கட்சியின் கடைசி ஆண்டுப் பேராளர் கூட்டமாக ஆகிவிடக் கூடாது என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இதனிடையே கட்சியின் தேசியத் தலைவர் பதவிக் காலத்தை மூன்று தவணைகள் எனக் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் இதனால் கட்சிக்கு புதிய புதிய தலைமைத்துவம் கிடைக்க வழி பிறக்கும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker