Latestமலேசியா

மஇகா இளைஞர் துணைத் தலைவர் சுப்ரா! மத்திய செயலவையில் புனிதன் -தமிழ்வாணன்!

கோலாலம்பூர், செப். 30- மஇகாவின் தேசிய இளைஞர் பிரிவு துணைத் தலைவர் தேர்தலில் ஜொகூரின் சுப்ரமணியம் வெற்றி பெற்றள்ள நிலையில், மத்திய செயலவை உறுப்பினர் பதவிகளுக்கு புனிதன் மற்றும் தமிழ்வாணன் ஆகியோர் தேர்வு பெற்றனர்.

இளைஞர் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுப்ரமணியம் 2,724 வாக்குகள் பெற்றார். அதேவேளையில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுபாஷ் சந்திர போஸ் 1,303 வாக்குகள் பெற்றனர்.

மத்திய செயலவைக்கு போட்டியிட்டவர்களில் புனிதன் 3,687 வாக்குகளும் தமிழ்வாணன் 2,845 வாக்குகளும் நேருஜி 1,623 வாக்குகளும் பெற்றனர். இதில் புனிதனும் தமிழ்வாணனும் தேர்வு பெற்றனர்.

மஇகா புத்ரி பிரிவின் தலைவியாக பொன்.கோகிலம் தேர்ந்தெடுக்கப்பட்ட வேளையில் துணைத்தலைவியாக ஹேமலதா தேர்வு பெற்றார். மேலும் ஏற்கெனவே மஇகா இளைஞர் தேசிய தலைவராக தினாளன் போட்டியின்றி தேர்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker