Latestஉலகம்

இந்தோ. நிலநடுக்கம்: 1,100 பேர் பலி! இடிபாடுகளில் சிக்கியோரை மீட்க முயற்சி!

சுலாவாசி, அக்.1- இந்தோனேசியாவின் சுலாவாசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமிக்கு பலியானவர்களின் எண்ணிக்கை இதுவரை 1,100 என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தஎண்ணிக்கை மேலும் உயரலாம் என அதிகாரிகள் தரப்பு கூறுகின்றனர்.

சுலாவாசி தீவின் பலு நகரில் ஆயிரக்கணக்கானோர் குழுமியிருந்த கடற்கரை விழாவின் போது நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி அலைகள் தாக்கியதால் பலர் அதில் சிக்கி உயிரிழந்தனர்.

இதனால் பலு நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. நிலநடுக்கத்தினால் கட்டடங்களின் சரிவு, இடிபாடுகள், வேருடன் பெயர்ந்து விழுந்த மரங்கள், வாகனங்கள் என நகரமே குப்பை மேடு போன்று காட்சி அளிக்கின்றது.

பலு நகரில் மீட்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது. கட்டட இடிபாடுகளில் பல உடல்கள் சிக்கி உள்ளதாகவும் மீட்க முடியாத அளவுக்கு பல உடல்கள் இருப்பதாகவும் அதிகாரிகள் கூறினர்.

இங்குள்ள ரோவா ஹோட்டல் கட்டட இடிபாடுகளுக்குள் சுமார் 50 பேர் சிக்கி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் மீட்பதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தீரிவித்தனர்.

மேலும் பவுல் நகரில் அதிக அளவு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிலநடுக்கம் மற்றும் சுனாமிக்கு பலியானவர்கள் அனைவரையும் அந்தந்தப் பகுதிகளில் கூட்டமாக அடக்கம் அதிபர் ஜோகோ விடோடோ அனுமதி அளித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிபர் மேற்கொண்ட ஆய்வுகளுக்கு பின்னரே பலி எண்ணிக்கை 1,100 எனவும் அது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கவும் நிவாரணப் பணிகளுக்கும் பிற நாடுகள் உதவ முன்வர வேண்டும் என்று இந்தோனிசிய அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker