Latestஉலகம்

அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம் ! இலங்கையில் சுனாமி பீதி!

போர்ட் பிளேர், அக்.2- அந்தமான் தீவுகளில் நேற்று மாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. 5.0 ரிக்டர் அளவில் அந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற பதட்டம் நிலவுகிறது.

வங்காள விரிகுடா கடற்பகுதியில் சுமார் 300 தீவுகளை கொண்டதாக அந்தமான் தீவு காணப்படுகின்றது. இந்த நிலநடுக்கத்தில் வீடுகளில்  அதிர்வை உணர்ந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதுவரையில் இந்த நிலநடுக்கத்தில் உண்டான சேதரங்கள்  பற்றி தகவல் இல்லை.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அதிகாலை இந்தோனேசியாவில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கத்தை அடுத்து அதனைத் தொடர்ந்து தற்போது அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பதால் அச்சநிலை மேலோங்கி உள்ளது.

அந்தமான் பகுதியி ஏற்படும் நிலநலநடுக்கம் எதுவும் இலங்கை நோக்கிப் பாயக்கூடிய சுனாமியை ஏற்படுத்தி விடும் என்ற பீதி இலங்கையில் நிலவுகிறது.

எனினும் இலங்கைக்கு தற்போது சுனாமி ஆபத்து இல்லை என்றும் அது தொடர்பில் தீவிர கண்கானிப்பைச் செலுத்தி வருவதாகவும் இலங்கை பருவநிலை ஆய்வு மையத்தின் அறிக்கை கூறியது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker