Latestஉலகம்

செவ்வாயில் உருவங்கள்: இவர்கள் யார்? வேற்றுக் கிரகவாசிகளா? அதிர்ச்சித் தகவல்!

நியூயார்க், அக்.2- நாசாவின் ‘ஸ்பிரிட்’ எனப்படும் செவ்வாய்க் கிரக விண்கலம் எடுத்த புகைப்படம், வேற்றுக் கிரகவாசிகள் இருப்பதற்கான மறுக்க முடியாத ஆதாரமாக இருக்கும் என சிலர் நம்புகின்றனர்.

இந்தப் புகைப்படத்தை வெளியிட்டவரும் பிரபல வேற்றுக் கிரகவாசிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள ஸ்காட் வாரிங் என்பவர் வேற்று உயிரினம் இருப்பதையே இந்தப் புகைப்படம் காட்டுகிறது எனக் கூறுகிறார்.

நாசா புகைப்படத்தில் உள்ள குறிப்பிட்ட அந்தப் பாறை வடிவமைப்பு, மனிதனைப் போன்ற தோற்றத்தை கொண்டு உள்ளதை நிராகரிக்கலாம் என்கிறார் வாரிங்.

வேற்றுக் கிரகவாசி பற்றிய ஆய்வில் வல்லுனரான இவர், இது நிச்சயமாக ஏதேச்சையாக நடந்தது இல்லை என்கிறார் . மேலும் அவர் கூறுகையில் செவ்வாயில் எடுத்த புகைப்படத்தில் 20க்கும் மேற்பட்ட உருவங்கள் இருப்பதாக தெரிகிறது.

இது ஏதேச்சையானது எனக் கூறுகின்றனர். ஏதேச்சையானது என்றால், ஏன் எவ்வளவு உருவங்கள் தென்படுகின்றன என்று கேள்வி எழுப்புகிறார்.

முதலில் அந்தப் புகைப்படத்தை பார்க்கும் போது இரண்டு பாறைகளின் உச்சி போன்று தெரிந்தது. சற்று உற்று நோக்குகையில் அது பாறையின் உச்சி அல்ல. ஓர் உயிரினத்தின் கால் என அறிய முடிந்தது. மேலும் அதில் தலைப்பகுதி, தோள் மற்றும் முன்பகுதியையும் காண முடிகிறது.

ஸ்காட் வாரிங் யூடியூப்பில் பதிவேற்றிய வீடியோவில் காண்பிக்கப்பட்ட புகைப்படத்தை பார்த்த பலர், அவரின் விநோதனமான ஆய்வு முடிவுகளை ஒப்புக் கொண்டனர். இது தொடர்பாக யூடியூப் வீடியோவில் கருத்து தெரிவித்த பலரும் நேர்மறையாகவும், சிலர் எதிர்மறையான கருத்துகளையும்
பகிர்ந்துள்ளனர்.

இவரின் கருத்திற்கு எதிர்க் கருத்து கொண்டோர் இந்த வேற்றுக் கிரகவாசியின் வடிவம் போல காணப்படுவது, தானாக உருவான பாறை எனக் கூறுகின்றனர்.

இதனிடையே, தனது வேற்றுக் கிரகவாசிகள் தொடர்பான ஆய்வுகள் வாயிலாக பல்வேறு உண்மைகளை வெளிப்படுத்தியதன் காரணமாக அந்தத் துறையில் பணியாற்றும் அனைவரிடத்திலும் ஸ்காட் வாரிங் மிகவும் பிரபலமானவராகத் திகழ்கிறார்.

இவர் நடந்ததும் UFOSightingsDaily.com இணையத் தளத்தில் நாசாவினால் எடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான செவ்வாய்க் கிரக புகைப்படங்களை ஆராய்ந்து பூமிக்கு வேற்றுக் கிரகவாசிகள் வருவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன எனத் திட்டவட்டமாக கூறுகிறார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker