Latestஉலகம்

ஆப்கான் தேர்தல் பேரணியில் வெடிகுண்டு தாக்குதல்: 14 பேர் பலி

காபுல், அக்.3- ஆப்கானிஸ்தானில் தேர்தல் பேரணிக்கு எதிராக நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 14 பேர் கொல்லப் பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் நாடாளுமன்ற கீழவைக்கான தேர்தல் வருகிற 20- ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்நாட்டின் கிழக்கு மாநிலத்திலான நாங்கர்ஹரில் சுயேட்சை வேட்பாளர் அப்துல் நாசர் முகமது என்பவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அவரது பேரணியில் தற்கொலை தீவிரவாதி ஒருவன் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 14 பேர் பலியாகினர். 40 பேர் காயமடைந்து உள்ளனர்.

இதில் அதுல் நாசருக்கு எத்தகைய் காயமும் ஏற்படவில்லை. ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை ஒழிப்பதற்காக அரசு படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், அங்கு தலிபான் பிடியில் உள்ள பகுதியில் தேர்தல் எப்படி நடத்தப்படும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு தீவிரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker